Breaking News

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம்


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம் பகுதி மற்றும்  காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், களியாம்பூண்டி கிராமம், யாதவர் தெரு பகுதியில்  நேற்று பெய்த மழையில் எதிர்பாராத விதமா






க மின்சாரம் தாக்கி உயிரிழந்த  நபர்களின் குடும்பத்தினருக்கு மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.ஆர்.காந்தி அவர்கள் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.4 இலட்சம் ECS  மூலம் வங்கி கணக்கில் வரவு வைக்கும் பொருட்டு உரிய உத்தரவு ஆணைகளை வழங்கி, ஆறுதல் கூறினார்கள்.

காஞ்சிபுரம் வட்டம், வ.ஊ.சி தெரு, பல்லவர் மேடு பகுதியை சேர்ந்த செல்வன்.திலிப்குமார், த/பெ நந்தகோபால் (வயது 23) என்ற வாலிபரும் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், களியாம்பூண்டி கிராமம், யாதவ தெருவை சேர்ந்த திரு.லட்சுமிநாராயணன் த/பெ.பலராமன் ஆகியோர் நேற்று பெய்த மழையில் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, உயிரிழந்தஅவர்களின் குடும்பத்தினருக்கும் இன்று (16.10.2024) மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.ஆர்.காந்தி அவர்கள் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.4 இலட்சம் ECS  மூலம் வங்கி கணக்கில் வரவு வைக்கும் பொருட்டு உரிய உத்தரவு ஆணைகளை வழங்கி, ஆறுதல் கூறினார்கள்.

மேற்படி இறந்த செல்வன்.திலிப்குமார், த/பெ நந்தகோபால் (வயது 23) என்ற வாலிபரின் வாரிசுதாரரான அவரது தாயார் திருமதி. காளியம்மாள் க /பெ நந்தகோபால் என்பவருக்கு,  காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், களியாம்பூண்டி கிராமம், யாதவர் தெருவை சேர்ந்த திரு.லட்சுமிநாராயணன் த/பெ.பலராமன்  என்பவரின் வாரிசுதாரரான அவரது மனைவி      திருமதி. சரளா க/பெ.லட்சுமிநாராயணன் ஆகியோருக்கு வடகிழக்கு பருவமழையால் இறந்தற்கான மாநில பேரிடர் நிவாரணத் தொகை ரூ.4,00,000/- ECS மூலம் வங்கி கணக்கில் வரவு வைக்கும் பொருட்டு உரிய உத்தரவு ஆணையினை மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்கள்.

இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பூக்கடை சத்திரம் பகுதியில் நடைபெற்றுவரும் பாதாள சாக்கடை அடைப்பு நீக்கும் பணியினை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, காஞ்சிபுரம் வட்டம், கீழ்கதிர்பூரில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் தாழ்வான பகுதியில் வசித்த பொதுமக்களை மீட்டு  தங்க வைக்கப்பட்டுள்ள 112 நபர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி, உத்திரமேரூர் வட்டம்,  களியனூர் பகுதியில்  அமைக்கப்பட்டுள்ள முகாமில் தாழ்வான பகுதியில் வசித்த பொதுமக்களை மீட்டு  தங்க வைக்கப்பட்டுள்ள 14 நபர்களுக்கும் மற்றும் வையாவூர் பகுதியில்  அமைக்கப்பட்டுள்ள முகாமில் தாழ்வான பகுதியில் வசித்த பொதுமக்களை மீட்டு   தங்க வைக்கப்பட்டுள்ள 27 நபர்களுக்கும் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் அவர்கள் நிவாரண உதவிகளை வழங்கி, மதிய உணவுகள் பரிமாறி நலம் விசாரித்தார்.

இந்நிகழ்ச்சியின் போது காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க.செல்வம், உத்தரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.க.சுந்தர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.வி.எம்.பி.எழிலரசன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் திருமதி.எம்.மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.வெங்கடேஷ், காஞ்சிபுரம் சார் ஆட்சியர் திரு.ஆஷிக் அலி, இ.ஆ.ப.,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி சத்யா  மற்றும்  அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments