காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் முதல் ஆண்டு மாணவ மாணவிகளுக்கு வரவேற்பு விழா
காஞ்சிபுரம் :
மருத்துவ கல்லூரி நிர்வாகம் சார்பில் மருத்துவர்களுக்கான வெள்ளை நிற கோட் அணிவித்து உறுதிமொழி எடுக்க வைத்தனர். மாணவர்கள் பெற்றோர்கள் என திரளானோர் பங்கேற்றனர்.
காஞ்சிபுரம் அடுத்த சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஏனாத்தூர் பகுதியில் மீனாட்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
மருத்துவக் கல்லூரியில் இளநிலை முதுநிலை மருத்துவப் படிப்புகள் கற்பிக்கப்பட்டு வரும் நிலையில் 2024-25 ஆண்டு இளநிலை எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்பிற்கான மாணவ மாணவிகள் சேர்க்கை நடத்தி முடிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து மருத்துவக் கல்லூரியில் வகுப்புகள் துவங்க உள்ள நிலையில் கல்வி பயிலச் சேர்ந்த 230 முதலாம் ஆண்டு மாணவ மாணவிகளை வரவேற்கும் நிகழ்ச்சி மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது.
மருத்துவ பல்கலைக்கழக இணை வேந்தர் ஆகாஷ் பிரபாகர் தலைமையில் நடைபெற்ற விழாவில் துணைவேந்தர் ஸ்ரீதர், இணை துணைவேந்தர் கிருத்திகா, பதிவாளர் சுரேகா வரலட்சுமி, டீன் ராஜசேகர், மருவக்கல்லூரி கண்காணிப்பாளர் பூபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு முதலாம் ஆண்டு மருத்துவக் கல்லூரி மாணவ மாணவியர்களை வரவேற்று, மருத்துவக் கல்லூரி சார்பில் மருத்துவர்களுக்கான வெள்ளை நிற கோட் வழங்கி அணிவிக்கச் செய்தனர்.
பின்னர் மருத்துவ கல்விக்கான உறுதி மொழியை வாசிக்க செய்து உறுதி மொழியை எடுக்க வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவ கல்லூரியில் பேராசிரியர்களும் மாணவ மாணவிகளும் முதலாம் ஆண்டு மாணவ மாணவிகளின் பெற்றோர்களும் என ஏரளானோர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments