திருவள்ளூர் மாவட்டத்தில் இந்த இடங்களில் மின் தடை அறிவிப்பு
திருமழிசை கோட்டத்தில் துணை மின் நிலையங்களில் மாதாந்திர அத்தியாவசிய மின் சாதனப் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் மின் விநியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் திருமழிசை பாலமுருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருநின்றவூர் பகுதிகள்
திருமழிசை கோட்டத்தை சேர்ந்த 110/33-11 கிலோ வோல்ட் திருநின்றவூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர அத்தியாவசிய மின் சாதனப் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதனால், 04.10.2024 அன்று காலை 09.00 முதல் மாலை 02.00 மணி வரை நெமிலிச்சேரி, பிரகாஷ் நகர் ,பாலாஜி நகர், நடுகுத்தகை, C.T.H ரோடு ,இந்திரா நகர், ராஜாங் குப்பம், கொசவன் பாளையம், அரண்வாயல், அரண்வாயல் குப்பம் , பெரியார் நகர், நாசிக் நகர் பாக்கம், புட்லூர் மற்றும் திருநின்றவூர் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மின் விநியோகம் நிறுத்தப்படும் .
கூடபாக்கம் பகுதிகள்
இதேபோன்று, திருமழிசை கோட்டத்தை சேர்ந்த 33/11 கிலோ வோல்ட் கூடபாக்கம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர அத்தியாவசிய மின் சாதனப் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் 04.10.2024 அன்று காலை 09.00 முதல் மாலை 02.00 மணி வரை புட்லூர், திருவூர், அரண்வாயல், அரண்வாயல் குப்பம், முருகன்சேரி ,மேட்டுகண்டிகை, கூடபாக்கம், குச்சிகாடு, மெய்யூர், புதுச்சத்திரம், சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
கீழானூர் பகுதிகள்
இதேபோன்று, திருமழிசை கோட்டத்தை சேர்ந்த 33/11 கிலோ வோல்ட் கீழானூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர அத்தியாவசிய மின் சாதனப் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் 05.10.2024 அன்று காலை 09.00 முதல் மாலை 02.00 மணி வரை கீழானூர், விஷ்ணுவாக்கம், கரிக்கலவாக்கம், மேலகொண்டையர், சிவன்வாயல் பண்டிகாவனூர் ,கோயம்பக்கம், ஆயலூர், பேரத்தூர், சிற்றத்தூர் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மின் விநியோகம் நிறுத்தப்படும்
இவ்வாறு செயற்பொறியாளர் திருமழிசை பாலமுருகன் தெரிவித்துள்ளார்.
No comments
Thank you for your comments