காஞ்சிபுரத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.4லட்சம் - அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.
காஞ்சிபுரம்,அக்.16:
காஞ்சிபுரம் பல்லவர்மேடு பகுதியில் வ.உ.சி.தெருவைச் சேர்ந்த நந்தகோபால் மகன் திலீப்குமார்(23)உத்தரமேரூர் அருகே களியாம்பூண்டி கிராமத்தில் யாதவர் தெருவைச் சேர்ந்த லட்சுமி நாராயணன்(44) இருவரும் பருவமழையின் போது மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தனர்.பூக்கட்டும் தொழிலாளியான திலீப்குமாரின் தாயார் காளியம்மாளியிடமும், விவசாயி லட்சுமி நாராயணன் மனைவி சரளாவிடமும் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.4லட்சத்துக்கான காசோலையை கைத்தறித்துறை அமைச்சரும்,மாவட்ட பேரிடர் பொறுப்பு அமைச்சருமான ஆர்.காந்தி வழங்கினார்.
இதன் தொடர்ச்சியாக வையாவூர்,உத்தரமேரூர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மொத்தம் 38 பேருக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார்.பின்னர் மதிய உணவும் வழங்கி நலம் விசாரித்தார்.காஞ்சிபுரம் அருகே கீழ்க்கதிர்ப்பூரில் அமைக்கப்பட்டிருந்த முகாமில் இருந்த 112 நபர்களுக்கு அமைச்சர் ஆர்.காந்தி நிவாரண உதவிகளையும் வழங்கினார்.
அமைச்சர் ஆர்.காந்தியுடன் எம்பி க.செல்வம்,எம்எல்ஏக்கள் க.சுந்தர்,எழிலரசன்,மேயர் எம்.மகாலட்சுமி யுவாரஜ், மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ்,காஞ்சிபுரம் சார் ஆட்சியர் ஆஷிக் அலி,ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது)சத்யா ஆகியோரும் உடன் இருந்தனர்.
No comments
Thank you for your comments