காஞ்சிபுரத்தில் 20 ஆண்டுகள் பழமையான மரம் அகற்றம்
காஞ்சிபுரம், அக்.16:
காஞ்சிபுரம் சிங்கப்பெருமாள் கோயில் தெருவிலிருந்த 20 ஆண்டுகள் பழமையான முறிந்து விழும் நிலையில் இருந்த மரத்தை பொதுமக்கள் கேட்டுக்கொண்டபடி தீயணைப்புத்துறையினர் திங்கள்கிழமை முற்றிலுமாக அகற்றினார்கள்.
காஞ்சிபுரத்திலிருந்து உத்தரமேரூர் செல்லும் சாலையில் உள்ள சிங்கப் பெருமாள் கோயில் சந்நிதி தெருவில் 20 ஆண்டுகள் பழமையான பெருங்கொன்றை மரம் இருந்து வந்தது.இம்மரம் வீடுகளை ஒட்டியும் பருவமழை மற்றும் சூறாவளிக்காற்றின் காரணமாக முறிந்து விழும் அபாய நிலையில் இருப்பதாக பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் தகவலின் அடிப்படையில் காஞ்சிபுரம் தீயணைப்புத்துறை மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் சங்கர் தலைமையில் 9 பேர் குழுவினர் மரத்தின் கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தினர்.
மரத்தின் மேற்பகுதியில் மின்சார வயர்கள் சென்றதாலும்,மரத்தின் கிளைகள் அதிக தடிமனாக இருந்ததாலும் சுமார் 3 மணி நேரமாக போராடி மரத்தினை அகற்ற வேண்டிய சூழநிலை ஏற்பட்டது.அப்பகுதி தெருவாசிகளும் நிம்மதிப் பெருமூச்சி விட்டனர்.
No comments
Thank you for your comments