Breaking News

குழந்தை திருமணங்கள் நடத்தினாலோ, ஆதரித்தாலோ 2 ஆண்டுகள் சிறை - காஞ்சிபுரம் ஆட்சியர் எச்சரிக்கை

காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குழந்தை திருமணங்களைஆதரித்தாலோ அல்லது நடத்தினாலோ இரு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 

குழந்தை திருமணச் சட்டத்தின் படி பெண்களின் திருமண வயது 18 ஆகவும்,ஆண்களின் திருமண வயது 21 ஆகவும் இருக்க வேண்டும்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற இருந்த 19 குழந்தை திருமணங்கள் கண்டறியப்படத்தில் 15 திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது. குழந்தை திருமணங்களில் 4 நடந்து முடிந்தது உட்பட தடுத்து நிறுத்தப்பட்ட 19 குழந்தை திருமணங்களுக்கும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் குழந்தை திருமணங்களை நடத்தினாலும், ஆதரித்தாலும் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும்,ரூ.ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்படும். 

குழந்தை திருமணம் எனத் தெரிய வந்தால் குழந்தைகளுக்கான உதவி எண் : 1098,மகளிர் உதவி எண்கள் 181 மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் சமூக நல அலுவலகத்தையும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

புகார் செய்பவர்களின் பெயர்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். மேலும் விபரங்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட சமூக நல அலுவலகம், பழைய ஊரக வளர்ச்சி முகமை கட்டிடம், முதல் தளம், காஞ்சிபுரம் மாவட்டம் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளுமாறும் ஆட்சியரது செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Thank you for your comments