Breaking News

காஞ்சிபுரம் சங்கரமடத்தில் 108 சுவாசினி பூஜை

காஞ்சிபுரம், அக்.3:

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் நவராத்திரியையொட்டி 108 சுவாசினிகளுக்கும் 108 கன்னிகளுக்கும் உலக மக்கள் நன்மைக்காக சிறப்பு பூஜைகள் புதன்கிழமை நடைபெற்றது.


காஞ்சிபுரம் சங்கர மடத்தில் நவராத்திரியையொட்டி உலக மக்கள் நன்மைக்காக 108 சுவாசினிகள்,108 கன்னிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.சுவாசினிகளும், கன்னிகளும் வரிசையாக அமரவைக்கப்பட்டு அவர்களுக்கு புத்தாடைகள், மலர்மாலைகள், பூஜைப்பொருட்கள் ஆகியன சமர்ப்பித்து சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. 

காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஆசிகளோடு நடைபெற்ற இந்நிகழ்வில் சங்கர மடத்தின் மேலாளர் ந.சுந்தரேச ஐயர்,காமாட்சி அம்மன் கோயில் ஸ்தானீகர் சுரேஷ் சாஸ்திரி,வெங்கடேஷ் சாஸ்திரி, ஸ்ரீதர் சாஸ்திரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து 10 நாட்கள் சுவாசினி பூஜை மற்றும் கன்னியா பூஜை நடைபெறும் எனவும் விழாக்குழுவினர் தெரிவித்தனர்.

No comments

Thank you for your comments