சீனிவாக்கம் ஏரிநீர்ணை பயன்படுத்துவோர் சங்க தேர்தலில் குளறுபடி - மாவட்ட ஆட்சியரிடம் மனு
காஞ்சிபுரம்:
சீனிவாக்கம் ஏரிநீர்ணை பயன்படுத்துவோர் சங்க தேர்தல் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தெரிவித்த நிலையில் மீண்டும் தேர்தலில் குளறுபடி தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அதிர்ச்சி..
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் சின்னிவாக்கம் ஊராட்சியில் ஏரி நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் அறிவிப்பு 04-09-2024 அன்று அறிவிக்கப்பட்டு 20-09-2024 அன்று மாலை 4 மணி வரை என அறிவிப்பு வெளியிடப்பட்டன.
மேலும் சின்னிவாக்கம் ஏரி நீர்ணை பயன்படுத்துவோர் சங்க தேர்தலுக்காக ஜெயம்மாள், தேவகுமாரன், சத்யாசிங், பெருமாள், ஜெகத்ரட்சகன், ரத்தினம் ஆகியோர் தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். அவற்றில் ரத்தினம் நீர்ப்பாசன பயன்படுத்துவோர் நல சங்க வேட்பாளர் பட்டியலில் வாக்காளர் பெயர் பட்டியலில் ஆட்சி மண்டல தொகுதி தொடர்பு எண்ணில் மனுதாரர் பெயர் இடம் பெறவில்லை என வேட்டு மனுவை கூறாய்வு செய்து மனுவை காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் தள்ளுபடி செய்தார்.
இதனைத் தொடர்ந்து சின்னிவாக்கம் ஏரி நீர் பயன்படுத்துவோர் நல சங்கம் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளரின் பெயர் பட்டியலை காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் வெங்கடேசன் தேர்தல் நடத்தும் அலுவலர் படிவம் 25 வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது 20 9 2024 அன்று படிவம் 25 வெளியிடப்பட்டது. போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டன.
அவற்றில் ஜெயம்மாள் சின்னிவாக்கம் ஏரி நீர் பாசன பயன்படுத்துவோர் நல சங்க தலைவராகவும், தேவகுமாரன், சத்யாசிங், பெருமாள், ஜெகத்ரட்சகன் ஆகியோர் ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிப்பு வெளியாகின.
இதற்கிடையில் தள்ளுபடி செய்யப்பட்ட ரத்தினம் மனு நள்ளிரவில் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் 30-09-2024 அன்று தேர்தல் நடைபெறும் என்றும் நிர்வாகிகளுக்கு தெரியப்படுத்தியது தொடர்ந்து போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியரை அணுகி இதற்கு உண்டான விளக்கம் கேட்கையில் நீர் பாசன பொதுப்பணி துறை உதவி பொறியாளர் ரத்தினத்தின் மனு திடீரென ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் தேர்தல் 30 9 2024 அன்று நடைபெறும் என்றும் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன அவற்றைப் பெற்றுக் கொள்ளுமாறு உதவி பொறியாளர் கூறியதை தொடர்நது சின்னிவாக்கம் ஏரி நீரினை பயன்படுத்துவோர் நல சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர்.
No comments
Thank you for your comments