அரசு தோட்டக் கலைப்பண்ணையை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
காஞ்சிபுரம், செப்.4:
காஞ்சிபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட களக்காட்டூர் அருகேயுள்ள விச்சந்தாங்கல் ஊராட்சியில் 24 ஹெக்டேர் பரப்பளவில் அரசின் சார்பில் தோட்டக்கலைப்பண்ணை அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இப்பண்ணையை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டு அங்கு பயிரிடப்பட்டுள்ள பல்வேறு செடிகளின் தன்மை குறித்து கேட்டறிந்தார்.
இதனையடுத்து அதே களக்காட்டூர் ஊராட்சியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையம் மற்றும் கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் குடியிருப்பு பகுதிகளையும் ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


No comments
Thank you for your comments