Breaking News

பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

 காஞ்சிபுரம் 

காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கொல்கத்தாவில் முதுநிலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து கையில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் 

மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜிகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு மருத்துவப் பயின்று வந்த மாணவி ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி இரவு பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டார்.

பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டு குற்றவாளிகளை உடனடியாக கண்டித்து தகுந்த தண்டனையும் வழங்கிட வேண்டும்.



இந்திய நாட்டில் இதுபோன்ற குற்ற செயல்கள் வேறு எங்கும் நடந்திடாத வண்ணம் பெண் குழந்தைகள், மாணவிகள், பெண் ஊழியர்கள் என ஒட்டுமொத்த பெண் சமூகத்தை பாதுகாக்க நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என   காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாநில தலைவர் லெனின் தலைமையில்  அனைத்து அரசு துறை சார்ந்த ஊழியர்கள் 50க்கும் மேற்பட்டோர் பெண்கள் உட்பட்ட ஒன்று சேர்ந்து கையில் மெழுகு வர்த்தி ஏந்தியபடி  கொல்கத்தாவில் நடைபெற்ற கொடூர சம்பவத்திற்கு எதிராக கண்டனக் கோசங்களை எழுப்பியவாறு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் துரைமுருதன், மாநில மகளிர்  அமைப்பாளர் எம் ஆர் திலகவதி, மருத்துவர் நல சங்க மாநில தணிக்கையாளர் கிருஷ்ணமூர்த்தி, வருவாய் அலுவலக சங்க மாவட்ட செயலாளர் நவீன், சத்துணவு ஊழியர் சங்க மாவட்டத் துணைத் தலைவர் சத்யா, சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரமணி, விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சாரங்கன், மாவட்ட செயலாளர் நேரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments