கடந்த 3 ஆண்டுகளில் 4761 பேர் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு - அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு
காஞ்சிபுரம், செப்.21:
காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் ஆகியன மாபெரும் இணைந்து தனியார் வேலைவாய்ப்பு முகாமை நடத்தினார்கள்.
காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமிற்கு ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்தார்.மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், எம்எல்ஏ எழிலரசன்,மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ்,மகளிர் திட்ட இணை இயக்குநர் மு.பிச்சாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வேலைவாய்ப்புத்துறை துணை இயக்குநர் ஆர்.அருணகிரி வரவேற்று பேசினார்.பச்சையப்பன் கல்லூரி முதல்வர் ப.முருகக்கூத்தன் அறிமுகவுரை நிகழ்த்தினார்.
முகாமில் தேர்வான 512 பேருக்கு குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு பணிநியமன ஆணைகளை வழங்கி பேசியதாவது..
காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக போட்டித் தேர்வர்களுக்காக நடைபெற்ற இலவசப் பயிற்சி முகாமில் 1852 பேர் பங்கேற்றதில் 169 பேர் எவ்வித செலவும் இல்லாமல் அரசுப்பணியில் சேர்ந்துள்ளனர்.கடந்த 3 ஆண்டுகளில் 36 தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அதன் மூலமாக 4761 பேர் வேலைவாய்ப்பு பெற்றிருக்கின்றனர்.வரும் 2026 ஆம் ஆண்டுக்குள் அரசுத்துறையில் 75000 காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது.தமிழகம் முழுவதும் நான் முதல்வன் திட்டம் மற்றும் கலைஞர் நூற்றாண்டு வேலைவாய்ப்பு முகாம்கள் மூலமாகவும் மொத்தமாக 5,13,61 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
இளைஞர்கள் தொழில் செய்ய விரும்பினால் அவர்களுக்கு பயிற்சி, தொழில் செய்ய போதுமான இடம்,கடனுதவிகள், மானியங்கள் உட்பட அனைத்தும் வழங்கி தொழில் முனைவோர்களாக மாற்றுகிறோம்.இதுவரை 1104.78 லட்சம் அரசு மானியம் வழங்கி 33,466 இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக மாற்றியிருக்கிறது திமுக ஆட்சி.கடந்த 2001 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 15 ஆயிரம் ஏக்கர் நிலங்களை திமுக அரசு கையகப்படுத்தியது.2001 முதல் 2006 வரை நடைபெற்ற அதிமுக ஆட்சிக் காலத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் ஒரு தொழிற்சாலை கூட உருவாக்கப்படவில்லை.அதற்குப் பிறகு வந்த திமுக ஆட்சியில் தான் ஏராளமான தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டு இன்று 30 லட்சம் பேர் பணியாற்றி வருவதாகவும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசினார்.நிறைவாக வேலைவாய்ப்பு அலுவலர் வி.ராஜா நன்றி கூறினார்.
No comments
Thank you for your comments