21.09.2024 அன்று காஞ்சிரம் மாவட்டத்தில் இந்த இடங்களில் மின் தடை அறிவிப்பு
ஓரிக்கை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓரிக்கை 110/33-11 கே.வி துணை மின் நிலையத்தில் 21.09.2024 சனிக்கிழமை அன்று பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
அந்த நேரத்தில் காஞ்சிபுரம் நகரில் சில பகுதிகளான, வள்ளல் பச்சையப்பன் தெரு, கீரை மண்டபம், ரங்கசாமி குளம் பகுதிகள், காமராஜர் வீதி, மேட்டுத்தெரு, சின்ன காஞ்சிபுரம், பெரியார் நகர், தேனம்பாக்கம், முத்தியால்பேட்டை, களக்காட்டூர் பகுதி, திருகாலிமேடு, சேக்குப்பேட்டை வடக்கு, தெற்கு மற்றும் நடுத்தெரு, எண்ணைக்கார தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்,
டோல்கேட், விஷார், மாமல்லன் நகர், காந்திரோடு, ஐயம்பேட்டை, ஓரிக்கை, ஓரிக்கை தொழிற்பேட்டை, அண்ணா குடியிருப்பு, சதாவரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சுற்றியுள்ள பகுதிகள், செவிலிமேடு, பாலாறு தலைமை நீரேற்றம், சங்குசா பேட்டை ஆகிய பகுதிகளில்
வரும் 21.09.2024 சனிக்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை மின் தடை ஏற்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், காஞ்சிபுரம் / வடக்கு கோட்ட செயற்பொறியாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments