காஞ்சிபுரத்தில் காட்டுப்பன்றிகளை ஒழிக்க விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம், ஜூலை 31:
காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகம் அருகே காவலான் கேட் பகுதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் புதன்கிழமை காட்டுப்பன்றிகளை ஒழிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்டக் குழு சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவலான் கேட் பகுதியில் சங்கத்தின் வட்டார செயலாளர் என்.நந்தகோபால் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட செயலாளர் கே.நேரு, துணைச் செயலாளர் எஸ்.ஆனந்த், மாவட்ட பொருளாளர் கே.செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விளைநிலங்களை அதிகமாக சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை ஒழித்திட வாய்வெடி மருந்தை பயன்படுத்த அனுமதிக்க கோருதல், காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பயிர் சேதத்திற்கு உரிய இழப்பீட்டினை வழங்க வலியுறுத்தல், 60 வயதை கடந்த அனைத்து விவசாயிகளுக்கும் ஓய்வூதியமாக ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள்,உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments