Breaking News

சுதந்திர தினத்தையொட்டி மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன் கொடியேற்றி இனிப்புகளை வழங்கினார்.

 காஞ்சிபுரம் :

78வது சுதந்திர தினத்தையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு  அலுவலகத்தில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன்  கொடியேற்றி இனிப்புகளை வழங்கினார்.



78வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் உள்ளன் காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு அலுவலகத்தில் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தி மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்களுக்கு , பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு, அவ்வழியாக சென்ற பொதுமக்களுக்கும் இனிப்புகளையும் வழங்கினார்.

இதில் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்தியா சுகுமார், மாவட்ட குழு உறுப்பினர்கள், திமுக செயற்குழு உறுப்பினர் சுகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

No comments

Thank you for your comments