குறை தீர்க்கும் கூட்டத்தில் அரசுப்பணி நியமனம் பெற்றவர்களுக்கு நினைவுப்பரிசு - அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்
காஞ்சிபுரம், ஆக.12:
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் ஆட்சியர் கலைசெல்விமோகன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 318 கோரிக்கை மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணுமாறு ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை கேட்டுக்கொண்டார்.
இக்கூட்டத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்தவரின் வாரிசுதாரருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.ஒரு லட்சத்துக்கான காசோலையையும் ஆட்சியர் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகமும், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையமும் இணைந்து நடத்திய கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் படித்து குரூப்-2 தேர்வில் தேர்வாண 4 பேருக்கு குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் அமைச்சர் தா.மோ.அன்பரசன் நினைவுப்பரிசு வழங்கி பாராட்டினார்.
பின்னர் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழியையும் அமைச்சர் தலைமையில் அரசு அலுவலர்கள், மாணவர்கள் எடுத்துக் கொண்டனர்.பின்னர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியையும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் எம்பி க.செல்வம், எம்எல் ஏக்கள் க.சுந்தர்,எழிலரசன், காஞ்சிபுரம் எஸ்பி கே.சண்முகம்,மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ்,மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.ஆர்த்தி,வேலைவாய்ப்புத்துறை மண்டல இணை இயக்குநர்ஆர்.அருணகிரி, ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.படவிளக்கம்}அரசுப்பணி நியமனம் பெற்றவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்குகிறார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்
No comments
Thank you for your comments