Breaking News

காஞ்சிபுரத்தில் விருது பெற்ற மருத்துவர்களுக்கு பாராட்டு விழா

காஞ்சிபுரம், ஆக.28:

இந்திய மருத்துவக் கழகம் காஞ்சிபுரம் கிளையின் சார்பில் விருது பெற்ற மருத்துவர்களுக்கு பாராட்டு விழா, கண்தான இருவார விழா மற்றும் மருத்துவர்களுக்கான கருத்தரங்கம் ஆகியன புதன்கிழமை நடைபெற்றது.




இந்திய மருத்துவக் கழகம் காஞ்சிபுரம் கிளை சார்பில் காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்ற விருது பெற்ற மருத்துவர்களுக்கான பாராட்டு விழாவிற்கு கழகத் தலைவர் எஸ்.மனோகரன் தலைமை வகித்தார்.

துணைத் தலைவர் வெ.ரவி, மாநிலக் குழு உறுப்பினர்கள் பிடி சரவணன்,தி .விக்டோரியா,துணச் செயலாளர் வி.முத்துக்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க செயலாளர் சு.தன்யக்குமார் வரவேற்று பேசினார்.

ஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி முதல் செப்டம்பர் 8 ஆம் தேதி வரை கண்தான இருவார விழாவாக கொண்டாடப்படுவதாக கழக தலைவர் எஸ்.மனோகரன் தனது தலைமையுரையில் குறிப்பிட்டார்.

அண்மையில் நடைபெற்ற சுதந்திரதின நாளன்று விருது பெற்ற மருத்துவர்கள் ச.கர்ணன் சீனிவாசன், ஆனந்த ராமசுப்பிரமணியம், ஏ.என்.அரவிந்த், அஸ்வின் நாகராஜன் ஆகியோர் விழாவில் கௌரவிக்கப்பட்டனர். 

சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவர் பி.விஜயசங்கர் அசைவு குறைபாடு நோயின் சமீபத்திய கண்டுபிடிப்புகள் என்ற தலைப்பிலும், மருத்துவர் டி.சங்கமேஸ்வரன் ஜீரண மண்டல மருத்துவத்தில் அண்மைய முன்னேற்றங்கள் என்ற தலைப்பிலும் பேசினர்.

மருத்துவர் கே.ஹரிஷ்குமார் புற்றுநோய் விழிப்புணர்வு குறித்தும் பேசினார்.முன்னதாக கருத்தரங்கில் உரையாற்றிய மருத்துவர்களை மருத்துவர் ந.சு.ராதாகிருஷ்ணன் அறிமுகப்படுத்தினார்.

விழாவில் காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரப்பணிகள் துறை அலுவலர் மருத்துவர் டி.ஆர்.செந்தில், மாவட்ட தொழுநோய் பிரிவு மருத்துவப்பணிகள் துறையின் துணை இயக்குநர் டி.கனிமொழி ஆகியோர் உட்பட மருத்துவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments