பரந்தூரில் விமான நிலையம் அமையவுள்ள இடத்தில் நில எடுப்பு பணிகள், பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு மறுகுடியமர்வு செய்யவுள்ள கிராமங்களைஆட்சியர் ஆய்வு
காஞ்சிபுரம், ஆக.7:
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமையவுள்ள இடத்தில் நில எடுப்பு பணிகள் தொடங்க இருப்பதால் அதில் பாதிக்கப்படும் குடும்பங்களை மறுகுடியமர்வு செய்யவுள்ள கிராமங்களை ஆட்சியர் கலைச்செல்வி மோகன் புதன்கிழமை ஆய்வு செய்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீ பெரும்புதூர் மற்றும் காஞ்சிபுரம் வட்டாரத்திற்கு உட்பட்ட பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 19 கிராமங்களில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மூலம் புதிய பசுமைவெளி விமான நிலையம் அமைக்கப்படவுள்ளது.இதற்கான நில எடுப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
Also Read 🔥 ஆகஸ்ட் 8: பல விதமான துன்பங்கள் நீங்கும் நாக சதுர்த்தி, கருட பஞ்சமி ... வழிபாட்டு முறை மற்றும் நேரம்
பரந்தூர், ஆ.தண்டலம்,நெல்வாய்,ஏகனாபுரம்,மகா தேவி மங்கலம் ஆகிய 5 கிராமங்களில் நில எடுப்பில் பாதிக்கப்படும் 1060 குடும்பங்கள் மற்றும் மறுகுடியமர்வு செய்வதற்காக சிறுவள்ளூர், மடப்புரம், மதுரமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 238.78 ஏக்கர் பரப்புளவு நில எடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் காரணாக பாதிக்கப்படும் குடும்பங்களை மறுகுடியமர்வு செய்யவுள்ள கிராமங்களை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது எஸ்பி கே.சண்முகம்,மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ்,நில எடுப்பு பிரிவு மாவட்ட வருவாய் அலுவலர்கள் நாராயணன்,ஹரிதாஸ், கோட்டாட்சியர்கள் சரவணக்கண்ணன், வெங்கடே சன் உள்ளிட்ட அரசு அலுவலர்களும் உடன் இருந்தனர்.
No comments
Thank you for your comments