ரூ.7 கோடியில் மேம்படுத்தப்பட்ட காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட் - முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
காஞ்சிபுரம் :
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மிகவும் பழமையான காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேம்படுத்தும் பணி ரூ.7 கோடி செலவில் நடைபெற்றது. தற்போது பணிகள் முடிவுற்று இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொளி காட்சி மூலம் காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட்டை திறந்து வைத்தார்.
ராஜாஜி மார்க்கெட் பகுதியில், 248 கடைகளும் , உணவகம், வாகனம் நிறுத்துமிடம், கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
பின்னர் குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்ச்சிக்கு கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமை தாங்கினார். காஞ்சிபுரத்தில் ராஜாஜி மார்க்கெட் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கும் பணியை சிறுகுறு மற்றும் தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் காஞ்சிபுரம் தொகுதி எம்பி க. செல்வம், எம்எல்ஏக்கள் க. சுந்தர், வக்கீல் ஏழிலரசன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் துணை மேயர் குமரகுருநாதன், மண்டல தலைவர்கள் சந்துரு ,செவிலிமேடு மோகன், சாந்தி சீனிவாசன், மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன், மாவட்ட பொருளாளர் சண் ஃபிரண்ட் ஆறுமுகம், மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் வி. எஸ். ராமகிருஷ்ணன், பகுதி செயலாளர்கள் திலகர், வெங்கடேசன், மாநகர நிர்வாகிகள்கே.ஏ. செங்குட்டுவன், முத்து செல்வன், ஜெகநாதன், மாநகராட்சி கவுன்சிலர்கள் சுரேஷ், த. விஸ்வநாதன், மலர்கொடி தசரதன், கமலக்கண்ணன், கார்த்திக், ஆணையர் நவீந்திரன் உள்ளிட்ட வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் கே.பி. ஜே. மோகன் , டி.ஜி.எம் முரளி , கே.ஜி.எஃப் சரவணன் , ஜி.கே. வெங்கடேசன், வி.எஸ் என் சரவணன் , உள்ளிட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments