திருவள்ளுரில் மின் தடை அறிவிப்பு
திருவள்ளுர்:
திருவள்ளுர் கோட்டத்தைச் சேர்ந்த 110/33-11 கிலோ வோல்ட் பெரியபாளையம் துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் 11 KV வெங்கல் மின்பாதை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள 23.07.2024 அன்று காலை 09.00 மணிமுதல் மதியம் 02.00 வரை வெங்கல், பாகல்மேடு, செம்பேடு, காதர்வேடு, எர்ணாகுப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு மின்நிறுத்தம் செய்யப்படும் .
இதேபோன்று, திருவள்ளுர் கோட்டத்தைச் சேர்ந்த 33/11 கிலோ வோல்ட் பண்டிகாவனூர் துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் 11 KV கன்னிகைப்பேர் மின்பாதை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள 23.07.2024 அன்று காலை 09.00 மணிமுதல் மதியம் 02.00 வரை மஞ்சாகரணை, கன்னிகைப்பேர், கிருஷ்ணாபுரம் கண்டிகை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு மின்நிறுத்தம் செய்யப்படும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments
Thank you for your comments