காஞ்சிபுரத்தில் கல்வெட்டு பயிலரங்கம்
காஞ்சிபுரம், ஜூலை 16-
காஞ்சிபுரத்தில் கல்வெட்டு பயிலரங்கம் மற்றும் தொல்லியல் கண்காட்சி தொடக்க விழா சங்கரா கல்லூரியின் அத்வைதம் அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியின் அத்வைதம் அரங்கில் கல்வெட்டு பயிலரங்கம் மற்றும் தொல்லியல் கண்காட்சி தொடக்க விழா நடைபெற்றது.தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், கடல் சார் தொல்லியல் கழகம், விழுப்புரம் உமா கல்வி அறக்கட்டளை ஆகியன இணைந்து நடத்திய கல்வெட்டு பயிலரங்கத்திற்கு கல்லூரியின் முதல்வர் கே.ஆர்.வெங்கடேசன் தலைமை வகித்தார்.
காஞ்சிபுரம் அருங்காட்சியக காப்பாட்சியர் உமாசங்கர், முனைவர் ஜவஹர்பாபு, ராதாபாலன், பேராசிரியிர் மதுரைவீரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கரா கல்லூரி தமிழ்த்துறை தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் வரவேற்று பேசினார்.
Also Read 🔥 தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கைது!
கல்வெட்டு பயிலரங்கம் தொடர்பான கையேட்டினை தமிழக தொல்லியல்துறை இணை இயக்குநர் பூங்குன்றன் வெளியிட அதனை கிருஷ்ணகிரி மாவட்ட அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் பெற்றுக் கொண்டார்.
பின்னர் தமிழறிஞர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் ஆகியோர் பயிற்சிக்கான கையேட்டினை அறிமுகப்படுத்தினார்கள்.
கல்வெட்டு பயிலரங்கத்தின் நோக்கம் குறித்து அறநிலையத்துறையின் ஆலோசனைக் குழு உறுப்பினர் ராசவேலுவும், வரலாற்றுக்கு முற்பட்ட காலம் குறித்து கிருஷ்ணகிரி காப்பாட்சியர் கோவிந்தராஜூம் பேசினார்கள்.
இதனையடுத்து நடைபெற்ற தொல்லியல் கண்காட்சியை வாலாஜாபாத் வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் அஜய்குமார் திறந்து வைத்தார்.
No comments
Thank you for your comments