காஞ்சிபுரம் வர்த்தக சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா
காஞ்சிபுரம், ஜூலை 25:
காஞ்சிபுரம் வர்த்தக சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா சங்க கட்டிடத்தில் வியாழக்கிழமை சங்க முன்னாள் தலைவர் தண்டபாணி தலைமையில் நடைபெற்றது.
காஞ்சிபுரம் வர்த்தக சங்கத்தின் நிகழாண்டுக்கான புதிய தலைவராக மோதிலால், துணைத் தலைவராக அஸ்லம்பாஷா, செயலாளராக சங்கர், இணைச் செயலாளராக அசோக்குமார் ஜெயின்,பொருளாளராக அக்பர்பாஷ உள்ளிட்ட நிர்வாகக்குழுவினர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
காஞ்சிபுரம் துணை மேயர் ஆர்.குமரகுருநாதன் கலந்து கொண்டு வர்த்தக சங்கத்தின் சிறப்பான செயல்பாடுகளையும்,புதிய நிர்வாகிகள் செயல்படக்கூடிய விதங்கள் குறித்தும் சிறப்புரையாற்றினார்.
நிகழ்வில் முன்னாள் வர்த்தக சங்க நிர்வாகிகள் நித்யாகுமார், ராமகிருஷ்ணன் உட்பட சங்க நிர்வாகிகள்,உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments