தனுஷின் 'ராயன்' டிரைலர் வெளியீடு
காட்டுல ஆபத்தான மிருகம் எது தெரியுமா? தனுஷின் ராயன் டிரைலர் வெளியீடு
தனுஷ் நடித்து இயக்கியுள்ள படம் ராயன். கலாநிதிமாறனின் சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் உலகம் முழுவதும் வருகிற 26-ந்தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியானது.
டிரைலர் தொடக்கத்தில் செல்வராகவன் தனுஷிடம் காட்டுல ஆபத்தான மிருகம் எது தெரியுமா? என கேட்பது போல் டிரைலர் தொடங்குகிறது. அதன்பின் வெட்டுக்குத்து என நகர்கிறது. எஸ் சூர்யா தைரியம் இருந்தால் எனது இடத்தில் வந்து செய்யப்பட்டும் என கர்ஜிக்க, அதன்பின் தனுஷ் ரவுடி கூட்டத்தை வேட்டையாடுவது போன்று முடிவடைகிறது.
தனுஷின் 50-வது படமாக உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்தில், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்துள்ளனர். படம் வட சென்னையை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக தனுஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றது. படம் வரும் ஜூலை 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
No comments
Thank you for your comments