Breaking News

Ambassador Car ஏலம் அறிவிப்பு - பெண்கள் தனிச்சிறையின் வளாகத்தில் வாகனத்தை பார்வையிடலாம்..

வேலூர் பெண்கள் தனிச்சிறையின் கழிவு செய்யப்பட்ட அரசுதுறை வாகனம் Ambassador Car TN 23 G0641  முதிரா நிலையில் கழிவு செய்திட அனைத்து குறியீடுகளையும் கடக்காததாலும், 15 வருடங்கள் கடந்த நிலையில் வாகனத்தினை கழிவு செய்து பொது ஏலம் மூலம் விற்பனை செய்திட தகுதியுள்ள நிலையில் உள்ளது.


இவ்வாகனத்தினை இயக்குநர், மோட்டார் வாகனப் பராமரிப்புதுறை,  வேளச்சேரி, சென்னை கடித எண்..H1-5753/2022, நாள்.06.05.2022-ல் முதிரா நிலையில் கழிவு செய்து ஆணை வழங்கப்பட்டும், பொதுஏலத்தில் விற்பனை செய்ய சிறைக்கண்காணிப்பாளர், பெண்கள்தனிச்சிறை, வேலூர் அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  

எனவே இப்பெண்கள் தனிச்சிறையில் உள்ள வாகனத்தினை  15-07-2024-ம் தேதி காலை 11.00 மணியளவில் வேலூர் பெண்கள் தனிச்சிறையின் வளாகத்தில் பொது ஏலம் விட உத்தேசிக்கப்பட்டது. 

இந்நிலையில் நிர்வாக காரணத்தினை முன்னிட்டு அன்றைய தினம் வாகனம்  ஏலம் விடும்நடவடிக்கை தள்ளி வைக்கப்பட்டது. அதன்படி வாகனம் மீள 12.08.2024  அன்றுகாலை 11.00 மணி அளவில் வேலூர் பெண்கள் தனிச்சிறையின் வளாகத்தில் பொது ஏலம் விடப்படஉள்ளது.

வாகனத்தை ஏலம் எடுக்க பார்வையிடுவோர் ரூ.100/- (ரூபாய்நூறுமட்டும்) நுழைவுக் கட்டணம் செலுத்திய பின் ஏலம் கேட்க அனுமதிக்கப்படுவர்.

ஏலத்தொகையுடன் சேர்த்துவாகனத்திற்கு 18% விற்பனைவரியும் சேர்த்து செலுத்தவேண்டும். இதற்குண்டான ரசீது வழங்கப்படும்.  இந்த ரசீது ஏலம் எடுத்த வாகனத்திற்குண்டான உரிமை ஆவணமாகும். 

மேலும் விவரங்களுக்கு சிறைக்கண்காணிப்பாளர் பெண்கள் தனிச்சிறை வேலூர் /  சிறை அலுவலர் பெண்கள் தனிச்சிறை, வேலூர் ஆகியோரை அலுவலக நேரத்தில் நேரடியாகவோ அல்லது  0416-2266035 என்ற அலுவலக தொலைபேசி எண்கள்மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.



No comments

Thank you for your comments