Breaking News

தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு கோவையில் தடகள போட்டிகள் நடைபெற்றது..

கோவை:

தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு கோவையில் முதன்முறையாக  மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் நடைபெற்றது.  கோவையில் எஸ்என்எஸ் இன்ஸ்டிடியூஷன் கோவை அத்லெடிக் கிளப் மற்றும் விஜிஎம் மருத்துவமனை இணைந்து மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் நடத்தியது.


கோவை நேரு உள் விளையாட்டு அரங்கில் எஸ் என் எஸ் இன்ஸ்டிடியூஷன் கோவை அத்லெடிக் கிளப் மற்றும் விஜிஎம் மருத்துவமனை சார்பாக நடைபெற்ற மாவட்ட அளவிலான 49 மாநகராட்சி பள்ளிகள் பங்கேற்ற தடகளப் போட்டியினை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் துவக்கி வைத்தார். 

உடன் மாநகராட்சி துணை ஆணையர் செல்வ சுரபி, மாநகராட்சி துணை மேயர் ரா.வெற்றிச்செல்வன், மத்திய மண்டல  தலைவர் மீனா லோகு, மாநகராட்சி கல்வி குழு தலைவர் மாலதி. மற்றும் வி ஜி எம் மருத்துவமனை தலைவர் மருத்துவர் விஜி மோகன் பிரசாத் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். 

முன்னதாக கோவை அத்லடிக் கிளப் புரவலர் மருத்துவர் சுமன் சிறப்பு  விருந்தினர்களாக கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்றுப் பேசினார். 

நேரு  உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தடகள போட்டியில் 49 மாநகராட்சி நடுநிலைப்பள்ளி , உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 980க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் தடகள போட்டிகளில் கலந்து கொண்டனர்....

மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் உத்தரவின் பேரில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் மதிய உணவு மற்றும் குடிநீர் மற்றும் ஊட்டச்சத்து பானங்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் அருணா எஸ் என் எஸ் டெக் கல்லூரி முதல்வர் செந்தூர் பாண்டியன், சி டி ஏ ஏ செயலாளர் சம்சுதீன் , சி டி ஏ ஏ பொருளாளர் முனைவர் ஜான் சிங்கராயர், கோவை அத்லெடிக் கிளப் செயலாளர் சீனிவாசன் இணைச் செயலாளர் சிவகுமார், சி டி ஏ ஏ சரவணா காந்தி, மற்றும் மாநகராட்சி கல்வி அலுவலர் குணசேகரன் மாநகராட்சி மேற்பார்வையாளர் நிர்மலா சிவசாமி பூங்கொடி ஆகியோர் நிகழ்ச்சியில் முன்னிலை வகித்தனர்.பல்வேறு சுற்றுகளாக நடைபெற்ற தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை மாநகராட்சி துணை ஆணையாளர் செல்வ சுரபி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவியர்கள் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், பெற்றோர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

No comments

Thank you for your comments