Breaking News

வாலாஜாபாத் தாலுகாவில் 152 பேருக்கு ஜாதி சான்றிதழ் - காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் கலைவாணி வழங்கினார்

 வாலாஜாபாத், ஜூலை 4-

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுக்காவிற்கு உட்பட்ட குருவிமலை, வேடல்,ஆகிய கிராமங்களில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் பழங்குடியின மக்கள் தங்கள் குழந்தைகளின் பள்ளிக்கல்வியை தொடர்வதற்கு ஜாதிச் சான்றிதழ் கேட்டு வாலாஜாபாத் தாலுக்கா அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்து இருந்தனர்.


நரிக்குறவர் மற்றும் இருளர் பழங்குடியினர் மக்களின் கோரிக்கை மனுவினை பரிசீலனை செய்து ஆய்வு மேற்கொண்ட நிலையில் தகுதியானவர்களுக்கு ஜாதி சான்றிதழ்களை வழங்க மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி வாலாஜாபாத் தாலுக்காவிற்கு உட்பட்ட குருவிமலை கிராமத்தைச் சேர்ந்த 62 பேருக்கும், வேடல் கிராமத்தைச் சேர்ந்த 90 பேருக்கும் என நரிக்குறவர் மற்றும் இருளர் பழங்குடியின மக்கள் 152 பேருக்கு காஞ்சிபுரம் ஆர்டிஓ கலைவாணி நேரில் தேடிச் சென்று ஜாதி சான்றிதழ்களை வழங்கினார்.

No comments

Thank you for your comments