Breaking News

ஜூலை 15ம் தேதி அன்று மதுவிலக்கு மற்றும் அமலாக்கப்பிரிவில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்

 காஞ்சிபுரம் மாவட்ட மதுவிலக்கு மற்றும் அமலாக்கப்பிரிவில் கைப்பற்றப்பட்ட வாகனங்களை பொது ஏலம் விடுவது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

 காஞ்சிபுரம் மாவட்டத்தில், மதுவிலக்கு அமல் பிரிவு மற்றும் மாவட்ட காவல் நிலையங்களில் மதுவிலக்கு வழக்குகளில் சம்பந்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ள இருசக்கர வாகனங்கள் 13, மூன்று சக்கர வாகனம் -1 மற்றும் நான்கு சக்கர வாகனம் -1 ஆக மொத்தம் 15 வாகனங்கள் G.O.Ms.No.39 உள் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை (VII) துறை நாள்.22.10.2019 என்ற அரசாணை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவு ந.க.எண்.39742/2019/வி1  நாள் 08.03.2024-ன் படியும் வருகின்ற 15.07.2024-ம் தேதி திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் காஞ்சிபுரம் மதுவிலக்கு அமல்பிரிவு அலுவலகத்தில் (திருவீதிபள்ளம், காஞ்சிபுரம்) ஏலம் விடப்பட உள்ளது. 

வாகனங்கள் மதுவிலக்கு அமல்பிரிவு அலுவலகம் அருகே பார்வைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வாகனங்களை ஏலம் கேட்பவர்கள் முன் வைப்பு கட்டணத் தொகையாக ரூபாய் 1,000/-ஐ (ரூபாய் ஆயிரம் மட்டும்) மதுவிலக்கு அமல்பிரிவு, அலுவலகத்தில் 09.07.2024 மற்றும் 10.07.2024 ஆகிய தேதிகளில் காலை 10.00 மணிக்கு காவல் ஆய்வாளர் மதுவிலக்கு அமல்பிரிவு அவர்களிடம் செலுத்தி டோக்கன் பெற்றுக் கொள்ள வேண்டும். வாகனத்தை ஏலம் எடுத்தவர்கள் ஏலம் கேட்ட தொகையுடன் இரு சக்கர வாகனத்திற்கு அரசு விற்பனை வரி (GST) 12%  மற்றும் மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு (GST) 18% உடனடியாக செலுத்தி விட வேண்டும். 

வாகனத்தின் விபரம் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பீட்டு தொகை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  அலுவலக தகவல் அறிவிப்புப் பலகை மற்றும் காஞ்சிபுரம் மதுவிலக்கு அமல்பிரிவு அலுவலகத்தின் தகவல் அறிவிப்பு பலகையில் ஒட்டி வைக்கப்பட்டுள்ளது. 

வாகனங்களை முன்கூட்டியே பார்வையிடலாம். ஏலத்தில் கலந்து கொண்டு வாகனம் எடுக்காதவர்களுக்கு முன் வைப்பு கட்டணத் தொகை ஏலத்தின் முடிவில் திருப்பித் தரப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.         

No comments

Thank you for your comments