கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட பெண் காஞ்சிபுரம் எஸ்பியிடம் புகார்
காஞ்சிபுரம், ஜூன் 13:
காஞ்சிபுரத்தில் கந்து வட்டியால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தனது தாயார் மற்றும் குழந்தைகளுடன் மாவட்ட எஸ்பியை சந்தித்து தனக்கு பாதுகாப்பு அளிக்குமாறு கேட்டு வியாழக்கிழமை புகார் செய்தார்.
படவிளக்கம் : காஞ்சிபுரம் எஸ்பியிடம் புகார் செய்ய வந்திருந்த சல்சா மற்றும் அவரது தாயார் ராணி
காஞ்சிபுரம் சதாவரம் பகுதி காந்தி நகரில் வசித்து வரும் மகேந்திரன் மனைவி சல்சா(28)கூலித் தொழிலாளியாக இருந்து வரும் இவர் அதே பகுதியை சேர்ந்த அருள்,கோமதி தம்பதியரிடம் வீடு கட்டுவதற்காக கடந்த 2020 ஆம் ஆண்டு ரூ.2லட்சம் கடன் வாங்கியுள்ளார்.
மாதம் ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தமாக ரூ.4.50லட்சம் வரை வட்டி கொடுத்திருந்த நிலையில் மேலும் வட்டித்தொகையை தருமாறு கேட்டு மிரட்டுகிறார்.வீட்டை இடித்து விடுவதாகவும்,தன்னுடைய பெண் குழந்தைகளை கடத்தி சென்று விடுவதாகவும் மிரட்டுவதால் தனக்கு பாதுகாப்பு வழங்கிடுமாறு சல்சா காஞ்சிபுரம் எஸ்பியிடம் புகார் தெரிவித்தார்.
மிரட்டலுக்கு பயந்து இரு முறை சல்சா தற்கொலைக்கு முயன்று விட்டதாகவும், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும், தன்னை கந்துவட்டியாளர்களிடமிருந்து காப்பாற்றுமாறும் அவரது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.புகாரின் போது வழக்குரைஞர் அருண் மற்றும் சல்சாவின் தாயார் ராணி மற்றும் குழந்தைகளும் உடன் வந்திருந்தனர்.
No comments
Thank you for your comments