காஞ்சிபுரத்தில் இளம் மருத்துவர்கள் கூட்டமைப்பு தொடக்க விழா
காஞ்சிபுரம்,ஜூன் 11
காஞ்சிபுரத்தில் இளம் மருத்துவர்கள் கூட்டமைப்பு மற்றும் மருத்துவ மாணவர்கள் கூட்டமைப்பு தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
படவிளக்கம் : கூட்டமைப்பில் சேர்ந்த மருத்துவ மாணவிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற இந்திய மருத்துவக் கழக முன்னாள் தலைவர் தி.விக்டோரியா
இந்திய மருத்துவக் கழகம் காஞ்சிபுரம் கிளையின் சார்பில் இளம் மருத்துவர்கள் கூட்டமைப்பு மற்றும் மருத்துவ மாணவர்கள் கூட்டமைப்பு தொடக்க விழா கிளையின் தலைவர் எஸ்.மனோகரன் தலைமையில் நடைபெற்றது.
காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள தனியார் 5 நட்சத்திர விடுதியில் நடைபெற்ற இவ்விழாவிற்கு சங்க துணைத் தலைவர் வெ.ரவி,பொருளாளர் வெ.ஞானகணேஷ், முன்னாள் மாநில மண்டலத் துணைத் தலைவர் பி.டி.சரவணன், சங்க முன்னாள் தலைவர் தி.விக்டோரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சங்க மருத்துவக்கல்வி செயலாளர் ந.சு.ராதா கிருஷணன் வரவேற்று பேசினார்.விழாவில் இளம் மருத்துவர்கள் கூட்டமைப்பு மற்றும் மருத்துவ மாணவர்கள் கூட்டமைப்பு ஆகியன தொடங்கப்பட்டது.
இந்திய மருத்துவர்கள் சங்க இளம் மருத்துவர்கள் கூட்டமைப்பின் மாநில தலைவர் வி.எஸ்.ஹரிஹரன் கூட்டமைப்பில் மாணவர்கள் சேருவதால் ஏற்படும் பயன்கள் குறித்து விரிவாக பேசினார்.விழாவில் புதியதாக கூட்டமைப்பில் இணைந்த மருத்துவ மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
திடீர் மாரடைப்பை புரிந்து கொள்ளுதல் என்ற தலைப்பில் எஸ்ஆர்எம் குளோபல் மருத்துவமனையின் இருதய அறிவியல் நிறுவன இயக்குநர் டி.ஆர்.முரளீதரனும்,என்டாஸ்கோபி பரிசோதனையில் சமீபத்திய கண்டுபிடிப்புகள் என்ற தலைப்பிலும் பேசினார்கள்.நிறைவாக சங்க இணைச் செயலாளர் வெ.முத்துக்குமரன் நன்றி கூறினார்.விழாவில் இந்திய மருத்துவக்கழக காஞ்சிபுரம் கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள், இளம் மருத்துவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments