காஞ்சிபுரத்தில் தேமுதிக ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம், ஜூன் 25:
கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் காஞ்சிபுரம் மாவட்ட தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தேமுதிக மாவட்ட செயலாளர் ஏகாம்பரம் தலைமை வகித்தார். மாவட்டக் கழக நிர்வாகிகள் லோகநாதன், இளையராஜா, ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில விஜயகாந்த் மன்ற செயலாளர் அன்பு செல்வராஜ் கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு காரணமான திமுக அரசு தார்மீகப் பொறுப்பேற்று முதல்வர் பதவி விலக வேண்டும் என்று பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற கட்சியின் மூத்த நிர்வாகிகள்,தொண்டர்கள் பலரும் கறுப்புச்சட்டை அணிந்து திமுக அரசுக்கு எதிராக கண்டனக் கோஷங்களையும் எழுப்பினார்கள்.
No comments
Thank you for your comments