Breaking News

காஞ்சிபுரத்தில் பொது இடங்களில் கைப்பிடியுடன் சாய்வு தளம் அமைக்க மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கோரிக்கை

படவிளக்கம்: மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கத்தினர் அளித்த கோரிக்கை மனுவை பெற்றுக் கொள்கிறார் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன்

காஞ்சிபுரம், ஜூன் 19:

பொது இடங்களில் கைப்பிடியுடன் கூடிய சாய்வு தளம் அமைக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் காஞ்சிபுரம் ஆட்சியர் கலைச்செல்வி மோகனை சந்தித்து புதன்கிழமை கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். 

அக்கோரிக்கை மனுவில் மகளிர் உரிமைத் தொகை, இ-சேவை மையம், அனைத்து பேருந்து நிறுத்தங்கள் மற்றும் அனைத்து அரசு மற்றும் பொது இடங்களில் கைப்பிடியுடன் கூடிய சாய்வு தளம் அமைத்தல், இலவச வீட்டு மனைப் பட்டா உள்ளிட்ட கோரிக்கைகளை அடங்கிய 463 கோரிக்கைகளை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

இந்நிகழ்வின் போது மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ரா.மலர்விழியும் உடன் இருந்தார். 


No comments

Thank you for your comments