செபி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு மாத சம்பளம் ரூ.44,500
இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான (செபி) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Securities and Exchange Board of India
மொத்த காலியிடங்கள்: 97
பணி: Officer Grade A (AM) – General Streams– 62
பணி: Officer Grade A (AM) – Legal – 5
தகுதி: சட்டத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகள் வழக்குரைஞராக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Officer Grade A (AM) – IT – 24
தகுதி: பொறியியல் துறையில் கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், கணினி அம்பிளிகேசன் போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Officer Grade A (AM) – Electrical – 2
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் பிரிவில் பி.டெக் முடித்து பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Officer Grade A (AM) – Research – 2
தகுதி: பொருளாதாரம், வணிகம், வணிக நிர்வாகவியல், நிதி பொருளாதாரம், பொருளாதார அளவியல்,
கணிதப் பொருளாதாரம், விவசாயப் பொருளாதாரம், வணிகப் பொருளாதாரம், தொழில்துறை பொருளாதாரம், வணிகப் பகுப்பாய்வு, புள்ளியியல் போன்ற ஏதாவதொரு துறையில் முதுகலை, முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: Officer Grade A (AM) – Official Language – 2
தகுதி: ஹிந்தி மற்றும் ஹிந்தியில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்வதில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.44,500 - 89,150
வயதுவரம்பு: 31.3.2024 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசுவிதிகளின்படி அனைத்து பிரிவினருக்கும் வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என இரண்டு கட்டத் தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வு மையம்: முதல் கட்டத் தேர்வு மையம் தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், விருதுநகர், வேலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தஞ்சாவூர், நாகர்கோவில், கன்னியாககுமரி, ஈரோடு ஆகிய நகரங்களில் நடைபெறும்.
இரண்டாம் கட்ட ஆன்லைன் எழுத்துத்தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, கோவை மற்றும் மதுரை.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ.100, மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.1000. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் https://www.sebi.gov.in என்ற இணையதளத்தின் மூம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 30.6.2024
Recruitment Notification :https://ibpsonline.ibps.in/sebimarc24/
No comments
Thank you for your comments