Breaking News

முத்தமிழ் அறிஞர் 101வது பிறந்த நாளையொட்டி இனிப்பு போலி. மோர் மற்றும் குளிர்பானங்கள்

கழக தலைவர்-மாண்புமிகு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைகிணங்க கழக இளைஞரணி செயலாளர்-மாண்புமிகு அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆலோசனையின் பெயரில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர் க.சுந்தர் MLA அவர்களின் வழிகாட்டுதலின்படி நாடாளுமன்ற-சட்மன்ற உறுபினர்கள்-மாநகர செயலாளர் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி காஞ்சிபுரம் 18-வது வார்டு பகுதியில் மாமன்ற உறுப்பினர் மல்லிகாராமகிருஷ்ணன் தலைமையில் முத்தமிழ் அறிஞர் 101வது பிறந்த நாளை ஒட்டி போலி. மோர் மற்றும் குளிர்பானங்கள்  வழங்கப்பட்டது. 


காஞ்சிபுரம் 18வது வாடுக்கு உட்பட்ட வைகுண்டபுரம் பகுதியில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்த நாளை ஒட்டி கடந்த மூன்றாம் தேதி முதல் மதியம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் மல்லிகா ராமகிருஷ்ணன் தலைமையில் அன்னதானம் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டு வருகிறது. 

அந்த வகையில் இன்று இனிப்பு போலி, மோர் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டது. இதில் மாநில வர்த்தகர் அணி துணைச் செயலாளர் வி.எஸ்.ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார் 

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தெற்கு மாவட்ட திமுக சிறுபான்மை நல உரிமை அணி துணைத் தலைவர் ஈ. ஜாபர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு  போலி மோர் மற்றும் குளிர்பானங்கள் வழங்கினார்கள். 

இதில் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் குமரன்.ஏகாம்பரம் பார்த்திபன். இளைஞர் அணி மனோஜ் குமார். பழனிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் இதில் பொதுமக்கள் சுற்றுலாப் பயணிகள் என ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்று பெற்றுச் சென்றனர்

No comments

Thank you for your comments