பரந்தூரில் விமான நிலைய அமைக்க எதிர்ப்பு... ஏகனாபுரம் கிராமத்தினர் நூதன போராட்டம்
காஞ்சிபுரம், ஏப்.5:
படவிளக்கம்: நெற்றியல் திருமண் அணிந்தவாறு போராட்டத்தில் ஈடுபட்ட ஏகனாபுரம் கிராம பொதுமக்கள்
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய,மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.தினசரி இரவு தொடர்ந்து பல்வேறு அறப்போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து 650 வது நாளாக ஏகானாபுரம் நாகாத்தம்மன் கோயில் அருகில் ஏகனாபுரம் கிராம பொதுமக்கள் பலரும் நெற்றியில் திருமண் அணிந்து மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டனக் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பரந்தூரில் விமான நிலையம் அமைந்தால் நெல்வாய், நாகப்பட்டு, குணகரம்பாக்கம், பரந்துர், ஏகனாபுரம் உள்பட 13 கிராமங்களின் குடியிருப்புகள், விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டு பாழாகி விடும் என்றும் விமான நிலையத்துக்கு எதிரான போராட்டக் குழுவினர் பேசினார்கள்.
கடந்த இரு ஆண்டுகளாக நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களையும்,நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலையும் புறக்கணித்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
நெற்றியில் திருமண் அணிந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டனக் கோஷங்களை எழுப்பினார்கள்.

No comments
Thank you for your comments