காஞ்சிபுரத்தில் இஸ்லாமியர்கள் மழை வேண்டி சிறப்புத் தொழுகை
காஞ்சிபுரம்,மே.5:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் காஞ்சிபுரம் ஒலிமுகம்மது பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அமைப்பின் காஞ்சிபுரம் கிளைத் தலைவர் சாகுல்அமீத் தலைமையில் மழை வேண்டி சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
நிகழ்விற்கு துணைத் தலைவர் சாகுல்ஹமீது,செயலாளர் யூசுப்,துணை செயலாளர் அப்துல்லாஹ்,பொருளாளர் பாசில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கோடை வெயிலின் தாக்கம் குறையவும்,வறட்சி ஏற்படாமல் இருக்கவும்,வெப்ப நோய்களால் மக்கள் துன்பப்படாமல் இருக்கவும் ஏராளமான இஸ்லாமியர்கள் மழை வேண்டி சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.சிறப்புத் தொழுகையில் திரளான பெண்களும் பங்கேற்றனர்.
சிறப்புத் தொழுகைக்குப் பின்னர் ஒலிமுகம்மது பேட்டை மேட்டுத்தெருவில் பொதுமக்களுக்கு நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.இந்நிகழ்விலும் காஞ்சிபுரம் மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட துணைச் செயலாளர்கள் அன்சாரி,முகம்மது ஆசிப்,மாவட்ட மருத்துவ அணியின் செயலாளர் சர்புதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

No comments
Thank you for your comments