Breaking News

மங்களநாயகி கோவில் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது

விருத்தாசலம் அருகே மங்கலம்பேட்டையில் மங்களநாயகி கோவில் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.


கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே மங்கலம்பேட்டையில் அருள்மிகு மங்களநாயகி அம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமர்சியாக நடைபெறும். 

அதேபோல் இந்த ஆண்டு கடந்த 7-ம் தேதி காப்பு கட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று, சுவாமி வீதி உலா வந்தது.



இத்திருவிழாவின் திருத்தேரோட்ட திருவிழா இன்று  நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று, மாவிலை, வாழை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அம்மன் காட்சியளித்தார். 

பின்னர் மங்கள வாத்தியங்கள், மேள வாத்தியங்கள் வழங்க,  திருத்தேரினை நூற்றுக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இந்த கோவில் திருவிழாவில் மங்கலம்பேட்டை மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

No comments

Thank you for your comments