காஞ்சி சங்கர மடத்தில் தஞ்சாவூர் மன்னர் தரிசனம்
காஞ்சிபுரம், மே 13:
காஞ்சிபுரம் சங்கர மடத்தில் திங்கள்கிழமை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தின் மூத்த இளவரசர் எஸ்.பாலாஜி ராஜா போன்ஸ்லே தரிசனம் செய்தார்.
படவிளக்கம் : தஞ்சாவூர் மன்னருக்கு ஸ்ரீ மடத்தின் பிரசாதம் வழங்கும் காஞ்சி சங்கர மட மேலாளர் ந.சுந்தரேச ஐயர்
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தின் மூத்த இளவரசர் எஸ்.பாலாஜி ராஜா போன்ஸ்லே காஞ்சிபுரம் சங்கர மடத்தில் உள்ள மகா பெரியவர் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானங்களில் தரிசனம் செய்தார்.
பின்னர் காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளையும் சந்தித்து ஆசி பெற்றார்.காஞ்சி சங்கர மடத்தின் மேலாளர் ந.சுந்தரேச ஐயர் தஞ்சாவூர் மன்னருக்கு சால்வை அணிவித்து பிரசாதங்களும் வழங்கினார்.முன்னதாக அவர் காஞ்சி காமாட்சி அம்மனையும் தரிசனம் செய்தார்.
No comments
Thank you for your comments