காஞ்சிபுரம் ஓரிக்கையில் மாபெரும் இலவச கண் அறுவை சிகிச்சை முகாம்
காஞ்சிபுரம்:
ரோட்டரி கிளப் ஆப் காஞ்சிபுரம் கிராண்ட் சங்கம் , யங் இந்தியன்ஸ் காஞ்சிபுரம் சங்கம் மற்றும் சென்னை சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை யும் இணைந்து கடந்த 24.03.24 முதல் 02.04.24 வரை, காஞ்சிபுரம் ஓரிக்கையில் உள்ள பாரதிதாசன் தனியார் பள்ளியில் மாபெரும் இலவச கண் அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் 560 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு 169 பயனாளிகளுக்கு கண் புரை அறுவை சிகிச்சை நடைபெற்றது.
இந்த முகாமில் ரோட்டரி மாவட்டம் 3231 வருங்கால ஆளுநர் Rtn.T.S.Ravikumar அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார், மேலும் ரோட்டரி கிளப் ஆப் காஞ்சிபுரம் கிராண்ட் சங்கத்தின் தலைவர் Rtn.AR. சிவசிதம்பரம், யங் இந்தியன்ஸ் காஞ்சிபுரம் சங்கத்தின் தலைவர் Mr.Knr. ராஜராஜன், சங்கர நேத்ராலயா மருத்துவமனையின் மேலாளர் Mr.ArulKumar , பாரதிதாசன் மேல்நிலைப் பள்ளியின் தலைவர் Mr.M.ArunKumar அவர்களும் கலந்து கொண்டனர்
இம் முகாமின் ஏற்பாட்டினை ரோட்டரி கிளப் ஆப் காஞ்சிபுரம் கிராண்ட் சங்கத்தின் நிர்வாக இயக்குனர் Rtn.G.Murugesh ஏற்பாடு செய்திருந்தார்
.jpg)

No comments
Thank you for your comments