மே.9-ல் காஞ்சிபுரம் சங்கர மடத்தில் ஷியாமா சாஸ்திரிகள் ஜெயந்தி விழா - 350 இசைக்கலைஞர்கள் பங்கேற்கவுள்ளனர்.
காஞ்சிபுரம், மே 6:
ஹதராபாத்தில் உள்ள சனாதன சம்பிரதாய சங்கீத பாரதி அறக்கட்டளை சார்பில் காஞ்சிபுரத்தில் 12 வது தேசிய இசைத் திருவிழா நிகழ் மாதம் 2 ஆம் தேதி தொடங்கி வரும் 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
தொடக்க விழாவில் காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலந்து கொண்டு விழாவை தொடக்கி வைத்து அருளாசி வழங்கினார்.
சங்கர மடத்தின் மேலாளர் ந.சுந்தரேச ஐயர்,ஸ்ரீகாரியம் செல்லா.விஸ்வநாத சாஸ்திரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறக்கட்டளையின் இணைச் செயலாளர் காஞ்சி.தியாகராஜன் வரவேற்று பேசினார்.
காலையில் சங்கர மடத்திலும், மாலையில் காமாட்சி அம்மன் கோயில் நவராத்திரி மண்டபத்திலும் இசை விழா நடைபெறுகிறது.
இவ்விழாவில் அமெரிக்கா, பின்லாந்து, கனடா உள்ளிட்ட வெளிநாடுகள், வெளிமாநிலங்களிலிருந்தும் ஏராளமான இசைக் கலைஞர்கள் கலந்து கொண்டு ஷியாமா சாஸ்திரிகளின் கீர்த்தனைகளை பாடி வருகிறார்கள்.
மே.5 ஆம் தேதி நிகழ்ச்சியை கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி இ.இந்திரேஷ் பங்கேற்று தொடக்கி வைத்தார்.
மே.7 ஆம் தேதி நிகழ்வை ஐடிபிஐ வங்கியின் தலைவர் டி.என்.மனோகரன் தொடக்கி வைக்கிறார்.
விழாவின் முக்கிய நிகழ்வான ஷியாமா சாஸ்திரிகளின் 262 வது ஜெயந்தி விழா வரும் 9 ஆம் தேதி நடைபெறுகிறது. அன்று அதிகாலையில் காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும் வேளையில் 350 இசைக்கலைஞர்கள் ஷியாமா சாஸ்திரிகளின் கீர்த்தனைகளை பாடுகிறார்கள்.
பின்னர் காமாட்சி அம்மன் மற்றும் ஷியாமா சாஸ்திரிகள் விக்ரகங்களுடன் ஊர்வலமாக சங்கர மடத்துக்கு வந்து சிறப்பு அபிஷேகம் மற்றும் பக்தி இன்னிசை நிகழ்சசிகள் நடைபெறுகின்றன.
ஏற்பாடுகளை அறக்கட்டளையின் தலைவரும், மிருதங்க வித்வானுமான சீனிவாச கோபாலன் தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர்.

No comments
Thank you for your comments