நாளைய (24-05-2024) ராசி பலன்கள்
மேஷம்
நண்பர்களிடத்தில் வாதங்களை தவிர்க்கவும். உடனிருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். நினைத்த சில பணிகளில் தாமதம் உண்டாகும். வரவேண்டிய வரவுகள் தாமதமாக கிடைக்கும். எதிர்பாராத சில பொறுப்புகளால் மாற்றம் ஏற்படும். போட்டி நிறைந்த நாள்.
- அதிர்ஷ்ட திசை : வடக்கு
- அதிர்ஷ்ட எண் : 5
- அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
அஸ்வினி : வாதங்களை தவிர்க்கவும்.
பரணி : தாமதம் உண்டாகும்.
கிருத்திகை : மாற்றம் ஏற்படும்.
ரிஷபம்
சவாலான பணிகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகங்களும், ஒத்துழைப்பும் கிடைக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வழக்குகள் சாதகமாக முடியும். புதிய துறைகளில் ஆர்வம் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பலம் மற்றும் பலவீனங்களை உணர்வீர்கள். செலவு மேம்படும் நாள்.
- அதிர்ஷ்ட திசை : கிழக்கு
- அதிர்ஷ்ட எண் : 1
- அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
கிருத்திகை : ஒத்துழைப்பு கிடைக்கும்.
ரோகிணி : சாதகமாக முடியும்.
மிருகசீரிஷம் : புரிதல் உண்டாகும்.
மிதுனம்
நெருக்கமானவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயல்படுவீர்கள். பயணங்களின் மூலம் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். உறவுகள் பற்றிய புரிதல் உண்டாகும். கடன் சார்ந்த செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். கால்நடை பணிகளில் மேன்மை உண்டாகும். வெளி வட்டாரத்தில் மதிப்பு உயரும். வியாபார பணிகளில் மேன்மை ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.
- அதிர்ஷ்ட திசை : கிழக்கு
- அதிர்ஷ்ட எண் : 4
- அதிர்ஷ்ட நிறம் : ஆகாயநீல நிறம்
மிருகசீரிஷம் : மதிப்பளித்து செயல்படுவீர்கள்.
திருவாதிரை : சிந்தித்துச் செயல்படவும்.
புனர்பூசம் : மேன்மை ஏற்படும்.
கடகம்
உயர்கல்வி குறித்த சிந்தனை மேம்படும். ஆடம்பரமான செலவுகளை குறைப்பீர்கள். வித்தியாசமான பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். சிற்றின்ப செயல்களில் ஈடுபாடு உண்டாகும். வியாபாரத்தில் நெளிவு சுழிவுகளை அறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு கிடைக்கும். சிந்தனை மேம்படும் நாள்.
- அதிர்ஷ்ட திசை : தெற்கு
- அதிர்ஷ்ட எண் : 5
- அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
புனர்பூசம் : சிந்தனை மேம்படும்.
பூசம் : ஆர்வம் ஏற்படும்.
ஆயில்யம் : ஆதரவு கிடைக்கும்.
சிம்மம்
வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விரயங்கள் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்ப்புகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வீடு மாற்றம் குறித்த சிந்தனை உண்டாகும். கல்விப் பணிகளில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். பெரியோர்களின் ஆலோசனைகள் தெளிவினை ஏற்படுத்தும். பாராட்டு நிறைந்த நாள்.
- அதிர்ஷ்ட திசை : தென் மேற்கு
- அதிர்ஷ்ட எண் : 8
- அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மகம் : அனுபவம் கிடைக்கும்.
பூரம் : சிந்தனை உண்டாகும்.
உத்திரம் : தெளிவு ஏற்படும்.
கன்னி
வெளி வட்டாரத்தில் மதிப்பு மேம்படும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். மறைமுகமான எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். நினைவில் கொள்ளக்கூடிய சில நிகழ்வுகள் நடக்கும். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.
- அதிர்ஷ்ட திசை : தெற்கு
- அதிர்ஷ்ட எண் : 5
- அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
உத்திரம் : மதிப்பு மேம்படும்.
அஸ்தம் : தேடல் அதிகரிக்கும்.
சித்திரை : ஆர்வம் அதிகரிக்கும்.
துலாம்
குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். இறைப்பணிகளில் ஆர்வம் ஏற்படும். வாக்கு வன்மையால் ஆதாயம் உண்டாகும். வெளியூர் பொருட்கள் மூலம் ஆதாயம் ஏற்படும். தூக்கமின்மை பிரச்சனை ஓரளவு குறையும். நெருக்கடியான சூழல் மாறும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் மறையும். சோதனை மறையும் நாள்.
- அதிர்ஷ்ட திசை : கிழக்கு
- அதிர்ஷ்ட எண் : 6
- அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
சித்திரை : அனுசரித்துச் செல்லவும்.
சுவாதி : ஆர்வம் ஏற்படும்.
விசாகம் : கவலைகள் மறையும்.
விருச்சிகம்
நட்பு வட்டாரம் விரிவடையும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். விமர்சன பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. பலதரப்பட்ட சிந்தனைகளால் இறுக்கமான சூழல் உண்டாகும். செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை ஏற்படும். உதவும் பொழுது சூழ்நிலை அறிந்து செயல்படவும். எதிலும் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. ஆக்கப்பூர்வமான நாள்.
- அதிர்ஷ்ட திசை : மேற்கு
- அதிர்ஷ்ட எண் : 7
- அதிர்ஷ்ட நிறம் : இளம்மஞ்சள் நிறம்
விசாகம் : அனுசரித்துச் செல்லவும்.
அனுஷம் : இறுக்கமான நாள்.
கேட்டை : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
தனுசு
அலுவல் பணிகளில் திட்டமிட்டு செயல்படவும். வெளியூர் பயணங்களால் ஒருவிதமான சோர்வு ஏற்படும். கால் வலி ஏற்பட்டு நீங்கும். விலகிச் சென்றவர்கள் பற்றிய சிந்தனை உண்டாகும். வியாபாரப் பணிகளில் பொறுமை வேண்டும். சுப காரிய பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். சாதனை நிறைந்த நாள்.
- அதிர்ஷ்ட திசை : கிழக்கு
- அதிர்ஷ்ட எண் : 3
- அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மூலம் : திட்டமிட்டு செயல்படவும்.
பூராடம் : சிந்தனை உண்டாகும்.
உத்திராடம் : விவேகத்துடன் செயல்படவும்.
மகரம்
சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் மேம்படும். மனதளவில் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். வாகன வசதிகள் மேம்படும். இழுபறியாக இருந்துவந்த பணிகள் நிறைவேறும். புதுவிதமான இலக்குகள் மனதில் பிறக்கும். சுப காரிய எண்ணங்கள் ஈடேறும். வியாபாரத்தை அபிவிருத்தி செய்வீர்கள். ஆசைகள் மேம்படும் நாள்.
- அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
- அதிர்ஷ்ட எண் : 8
- அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
உத்திராடம் : சிந்தனைகள் மேம்படும்.
திருவோணம் : இலக்குகள் பிறக்கும்.
அவிட்டம் : அபிவிருத்தியான நாள்.
கும்பம்
தாயின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். இணைய பணிகளில் கவனத்துடன் செயல்படவும். மனதில் செல்வச் சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். அரசு காரியங்களில் ஆதரவு மேம்படும். கல்விப் பணிகளில் மேன்மை ஏற்படும். மாற்றம் பிறக்கும் நாள்.
- அதிர்ஷ்ட திசை : கிழக்கு
- அதிர்ஷ்ட எண் : 6
- அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம்
அவிட்டம் : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.
சதயம் : சிந்தனைகள் மேம்படும்.
பூரட்டாதி : மேன்மை ஏற்படும்.
மீனம்
கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். மனதளவில் தெளிவுகளும், புத்துணர்ச்சியும் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். அமைதி நிறைந்த நாள்.
- அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
- அதிர்ஷ்ட எண் : 5
- அதிர்ஷ்ட நிறம் : வெண்சாம்பல் நிறம்.
பூரட்டாதி : கருத்து வேறுபாடுகள் குறையும்.
உத்திரட்டாதி : ஆதரவான நாள்.
ரேவதி : அறிமுகம் கிடைக்கும்.
No comments
Thank you for your comments