Breaking News

ஆற்பாக்கத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நலத்திட்ட உதவிகள்

காஞ்சிபுரம், ஏப்.22-

காஞ்சிபுரம் அருகே ஆற்பாக்கம் கிராமத்தில் வசித்து வரும் பழங்குடியின மக்களுக்கு தமிழக வெற்றிக்கழகம் சார்பில் திங்கள்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


தமிழக வெற்றிக்கழகம் சார்பில் காஞ்சிபுரம் அருகே ஆற்பாக்கம் கிராமத்தில் வசித்து வரும் பழங்குயினர் மற்றும் இருளர் இன மக்கள் 100 பேருக்கு அரிசி, இலவச வேட்டி, சேலை, காய்கறிகள் அடங்கிய தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது. 

காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றியத்தின் தலைவர் மாகரல் ஏவிஎம்.வினோத் தலைமை வகித்தார். உத்தரமேரூர் கிழக்கு ஒன்றிய தலைவர் ரஞ்சித் முன்னிலை வகித்தார்.கட்சியின் மாவட்ட நிர்வாகி எஸ்பிகே தென்னரசு கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்வில் காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் சுகன், கே.சதீஷ், எம்.வினோத், உதயன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.


No comments

Thank you for your comments