Breaking News

இந்தியா மிகப்பெரிய பொருளாதார நாடாக வளர்ந்து வருகிறது - கல்லூரிக் கல்வித்துறை இணை இயக்குநர் பேச்சு

காஞ்சிபுரம், ஏப்.8:

பொருளாதாரத்தில் 5 வது இடத்தைப் பிடித்து உலக அளவில் இந்தியா மிகப்பெரிய பொருளாதார நாடாக வளர்ந்து வருகிறது என கல்லூரிக் கல்வித்துறையின் வேலூர் மண்டல இணை இயக்குநர் ஜி.எழிலன் திங்கள்கிழமை பேசினார்.


காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் பல்வேறு துறைகளில் திறமையாக செயல்பட்ட சிறந்த மாணவர்கள் 77 பேருக்கு விருது வழங்கும் விழா கல்லூரி முதல்வர் கே.ஆர்.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது.

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளர் ந.சுந்தரேச ஐயர் முன்னிலை வகித்து சிறந்த மாணவர்கள் விருதினை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு சிறந்த மாணவர் விருதுகளை வழங்கிய கல்லூரிக் கல்வித்துறை வேலூர் மண்டல இணை இயக்குநர் ஜி.எழிலன் பேசுகையில் 

முதலாளித்துவ நாடான அமெரிக்காவிலும், சமத்துவ நாடான சீனாவிலும் ஜனநாயகம் குறைவு.ஆனால் இந்தியா மிகச்சிறந்த ஜனநாயக நாடாக திகழ்கிறது.

ஜவஹர்லால் நேரு உருவாக்கிய கலப்பு பொருளாதார கொள்கையால் இந்தியா இன்று சிறந்து விளங்குகிறது. 

எம்.எஸ். சுவாமிநாதனால் கொண்டு வரப்பட்ட பசுமைப்புரட்சியால் இன்று அனைவருக்கும் உணவு கிடைத்துக் கொண்டு இருக்கிறது.

அதனால் 1965 முதல் இந்தியாவில் உணவுப்பஞ்சம் இல்லை. உலகிலேயே வளர்ந்த பொருளாதார நாடுகளில் இன்றைய இந்தியா 5 வது பெரியநாடாக திகழ்கிறது என்று பேசினார்.

நிறைவாக கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார். விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments