கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்குவது குறித்து ஆலோசனை கூட்டம்
காஞ்சிபுரம்
ஆய்வுக் கூட்டத்தில் பின்வரும் அறிவுரைகள் வழங்கப்பட்டது:
- அனைவருக்கும் தரமான மற்றும் தூய்மையான குடிநீர் வழங்குவதை உறுதி செய்யுமாறு தெரிவிக்கப்பட்டது.
- வறட்சி ஏற்படக்கூடிய பகுதிகளை கண்டறிந்து அப்பகுதியில் குடிநீர் ஆதாரங்கள் கூடுதலாக ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டது.
- அனைத்து பகுதிகளிலும் தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டது.
- தற்போது வரப்பெறும் குடிநீர் தொடர்பான புகார்கள் மீது உடன் நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
- குடிநீர் குழாய்கள், மோட்டார் பம்புகள் ஏதேனும் பழுது ஏற்பட்டால் உடன் சரி செய்திட தெரிவிக்கப்பட்டது.
- குளோரினேஷன் செய்து குடிநீர் சீராக விநியோகம் செய்வதை உறுதி செய்திட தெரிவிக்கப்பட்டது.
- பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தண்ணீர்பந்தல் அமைத்திட தெரிவிக்கப்பட்டது.
- குடிநீர் வீணாகாமல் கண்காணித்து மின்சாரத்தை சேமிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.வை.ஜெயக்குமார், காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையாளர்.திரு.செந்தில் முருகன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்), உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்), குன்றத்தூர் மற்றும் மாங்காடு நகராட்சிகளின் ஆணையர்கள் மற்றும் பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments