Breaking News

வாக்காளர் தகவல் சீட்டை வீடு வீடாக சென்று வழங்கும் பணி தொடக்கம்

2024- பாராளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, இன்று (01.04.2024) காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட வெங்கடாபுரத்தில் பொதுமக்கள் வாக்களிப்பதற்கான வாக்காளர் தகவல் சீட்டை  (Voter Information Slip)  வீடு வீடாக சென்று மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ,ஆ.ப., அவர்கள் வழங்கினார்கள்.






2024- பாராளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட ஆலந்தூர், திருப்பெரும்புதூர், உத்திரமேரூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள வாக்காளர்கள் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் மாதம் 19ம் தேதியன்று சிரமமின்றி வாக்களிக்க ஏதுவாக வாக்காளர்கள் விவரம் மற்றும் வாக்குச்சாவடி விவரங்கள் அடங்கிய வாக்காளர் தகவல் சீட்டு (Voter Information Slip)  தொடர்புடைய வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் (Booth Level Officers) மூலம் வழங்கும் பணி இன்று மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர்  திருமதி.மு.கலைவாணி, காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையாளர் திரு.செந்தில் முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments