திமுக வேட்பாளர் செல்வம் தீவிர வாக்கு சேகரிப்பு
அப்போது, வெங்கசேரி அருகே காவாம்பயிர் கிராமத்தில் உள்ள விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் அப்பகுதியில் உள்ள விவசாய பகுதிகளுக்கு சென்று வேர்கடலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பெண்களுக்கு உதவியாக வயலில் இறங்கி வேர்க்கடலை பயிரை பறித்துக் கொடுத்து துண்டு பிரசுரம் வழங்கி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
இதனைத் தொடர்ந்து ஆதவப்பாக்கம் கிராமத்தில் கூடியிருந்த பெண்களிடம் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க. சுந்தர் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு பேசுவையில் பத்து ஆண்டுகளாக கச்சத்தீவு பற்றியும் மீனவர்கள் பற்றியும் பேசாத பிரதமர் மோடி தற்பொழுது பேசி வருகிறார்.
இவர்களால் யாரு எந்த நன்மையும் கிடையாது. டெல்லியில் திமுக கூட்டணி ஆட்சி வெற்றி பெற்றால் சிலிண்டர் விலை 500க்கு வழங்கப்படும், பிரதமர் மோடி ₹400 ரூபாய்க்கு விற்ற சிலிண்டரை ஆயிரத்திற்கு விற்பனை செய்து வருகிறார்.
அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 2 ஆயிரம் ரூபாய்க்கு சிலிண்டர் விலையை உயர்த்தி விடுவார். செல்வம் வெற்றி பெற்று டெல்லிக்கு சென்றால் சிலிண்டர் விலை 500 ரூபாய் என பேசினார்.
ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், பேரூர் செயலாளர் பாரி வள்ளல், பொதுக்குழு உறுப்பினர் சசிகுமார், விசிக கட்சி மாவட்ட செயலாளர் எழிலரசன் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் திமுக நிர்வாகிகள், கழக முன்னோடிகள் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments