தேர்தல் விழிப்புணர்வு பாடல் அதிநவீன மின்னணு வாகனத்தில் ஒலிபரப்பு
காஞ்சிபுரம், ஏப்.17:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் வாக்காளிப்பதால் ஏற்படும் பயன்கள் தொடர்பான தேர்தல் விழிப்புணர்வு பாடல் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் வெளியிடப்பட்டது.
இதனை அத்துறையின் சார்பில் செயல்பட்டு வரும் அதிநவீன மின்னணு வாகனத்தின் மூலம் திரையிடப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஒலிபரப்பு செய்யப்பட்ட மின்னணு வாகனத்தை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார், ஆட்சியர்(பயிற்சி) க.சங்கீதா, ஆட்சியரின் தேர்தல் பிரிவு நேர்முக உதவியாளர் பார்த்தசாரதி ஆகியோர் பார்வையிட்டனர்.
ஏற்பாடுகளை மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.
No comments
Thank you for your comments