Breaking News

நாளைய (22-04-2024) ராசி பலன்கள்





மேஷம்

உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிர்பாராத பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். தடைபட்ட சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். மனதளவில் இருந்துவந்த கவலை குறையும். மற்றவர்கள் பற்றிய கருத்துகளை தவிர்க்கவும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும்.  நிதானம் வேண்டிய நாள்.

அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.

பரணி : வாய்ப்புகள் கிடைக்கும். 

கிருத்திகை : கவனம் வேண்டும்.





ரிஷபம்

திட்டமிட்ட சில பணிகளில் தாமதம் ஏற்படும். சிறு தூரப் பயணங்களால் மனதில் மாற்றம் உண்டாகும். சிறு மற்றும் குறுந்தொழில் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்தும்போது சூழ்நிலை அறிந்து செயல்படவும். மற்றவர்கள் பற்றிய கருத்துகளை தவிர்க்கவும். வியாபாரத்தில் விவேகம் வேண்டும். திறமை வெளிப்படும் நாள்.

கிருத்திகை : தாமதம் ஏற்படும்.

ரோகிணி : சூழ்நிலையறிந்து செயல்படவும். 

மிருகசீரிஷம் :  விவேகம் வேண்டும்.

மிதுனம்

வாக்குறுதிகள் அளிக்கும்போது சிந்தித்துச் செயல்படவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். நறுமணப் பொருட்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். உறுதி நிறைந்த நாள்.

மிருகசீரிஷம் : சிந்தித்துச் செயல்படவும். 

திருவாதிரை : தாமதம் ஏற்படும். 

புனர்பூசம் : ஆர்வமின்மை குறையும்.


 

கடகம்

மனதளவில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நினைத்த காரியங்கள் எண்ணியபடி நடக்கும். உடன் இருப்பவர்கள் இடத்தில் புரிதல் மேம்படும். கோபம் குறையும் நாள்.

புனர்பூசம் : குழப்பம் நீங்கும். 

பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும். 

ஆயில்யம் : புரிதல் மேம்படும்.




சிம்மம்

இழுபறியாக இருந்துவந்த சில தனவரவுகள் மீண்டும் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். மாணவர்கள் பாடங்களில் கவனத்துடன் இருக்கவும். பல்லில் சிறு சிறு வலிகள் தோன்றி மறையும். பயனற்ற பேச்சுக்களைக் குறைத்து கொள்ளவும். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். தனம் நிறைந்த நாள்.

மகம் : தனவரவுகள் கிடைக்கும்.

பூரம் :  கவனம் வேண்டும்.

உத்திரம் : மாற்றங்கள் ஏற்படும். 


கன்னி

சமூகப் பணிகளில் விழிப்புணர்வுடன் செயல்படவும். மனதில் சேமிப்பு தொடர்பான சிந்தனை மேம்படும். எதிலும் தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். இணைய வர்த்தகப் பணிகளில் விவேகம் வேண்டும். வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகள் சாதகமாக அமையும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். பயம் குறையும் நாள்.

உத்திரம் :  சிந்தனை மேம்படும்.

அஸ்தம் : விவேகம் வேண்டும். 

சித்திரை : ஆதாயம் கிடைக்கும். 


துலாம்

வெளியூர் தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உடலில் ஒருவிதமான அசதிகள் ஏற்பட்டு நீங்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். மறைமுகமான எதிர்ப்புகள் ஏற்பட்டு நீங்கும். அலுவலகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். வெளி உணவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. வேலையாட்களால் புதிய அனுபவம் ஏற்படும். இன்பம் நிறைந்த நாள்.

சித்திரை : அசதிகள் நீங்கும். 

சுவாதி : விவேகத்துடன் செயல்படவும். 

விசாகம் : அனுபவம் ஏற்படும். 


விருச்சிகம்

கணவன், மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். நண்பர்களின் வருகை ஏற்படும். எதிர்காலத்தை மனதில் கொண்டு சில முடிவுகளை எடுப்பீர்கள். வெளியூர் தொடர்பான பயணங்களால் ஆதாயம்  உண்டாகும். வியாபாரத்தில் லாபம் திருப்திகரமாக இருக்கும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். இழுபறியாக இருந்துவந்த பழைய வழக்குகள் சாதகமாகும். போட்டி நிறைந்த நாள்.

விசாகம் : புரிதல் அதிகரிக்கும். 

அனுஷம் : ஆதாயம்  உண்டாகும். 

கேட்டை : வழக்குகள் சாதகமாகும்.



தனுசு

சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். வித்தியாசமான பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். அரசு தொடர்பான துறைகளில் ஆதாயம் அடைவீர்கள். உத்தியோகப் பணிகளில் உயர்வு ஏற்படும். உற்பத்தி சார்ந்த தொழிலில் சந்தை நிலவரங்களை அறிந்து செயல்படவும். எதிர்பாராத சில பயணங்கள் சாதகமாக அமையும். பெருமை நிறைந்த நாள். 

மூலம் : ஆர்வம் உண்டாகும்.  

பூராடம் : உயர்வு ஏற்படும்.

உத்திராடம் : சாதகமான நாள்.



மகரம்

நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். யோகா, ஆன்மிகம் சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். மனம் விட்டுப் பேசுவதால் தெளிவு பிறக்கும். தந்தை வழியில் அனுகூலம் ஏற்படும். உத்தியோகத்தில் இழுபறியாக இருந்துவந்த வேலைகளை செய்து முடிப்பீர்கள். அக்கம்-பக்கத்தினருடன் பயனற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். தாமதம் விலகும் நாள்.

உத்திராடம் : ஆதரவு கிடைக்கும். 

திருவோணம் : தெளிவு பிறக்கும்.

அவிட்டம் : விவாதங்களைத் தவிர்க்கவும். 



கும்பம்

வியாபாரம் சார்ந்த விஷயங்களில் பொறுமை காக்கவும். பணி நிமிர்த்தமாக எதிர்மறை எண்ணங்கள் தோன்றும். ஜாமீன் சார்ந்த விஷயங்களை தவிர்ப்பது நல்லது. நினைத்த சில பணிகளை செய்து முடிப்பதில் காலதாமதம் உண்டாகும். மனதிற்கு நெருக்கமானவர்களால் பொறுப்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து செயல்படவும். விவேகம் வேண்டிய நாள்.

அவிட்டம் : பொறுமை காக்கவும். 

சதயம் : காலதாமதம் உண்டாகும்.

பூரட்டாதி : புரிதல் வேண்டிய நாள்.



மீனம்

மனதில் இருந்துவந்த குழப்பம் விலகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மேம்படும். கூட்டுத்தொழிலில் புதிய பங்குதாரர்களின் அறிமுகம் ஏற்படும். வீம்பு மறையும் நாள். 

பூரட்டாதி : குழப்பம் விலகும்.

உத்திரட்டாதி : நெருக்கம் அதிகரிக்கும். 

ரேவதி : அறிமுகம் ஏற்படும்.



No comments

Thank you for your comments