Breaking News

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.20.25 லட்சம்

காஞ்சிபுரம், ஏப்.4:

காஞ்சிபுரம் ஏகாம்பரநாத சுவாமி கோயில் உண்டியல்கள் வியாழக்கிழமை திறந்து எண்ணப்பட்டதில் பக்தர்கள் ரூ.20.25லட்சம் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.



பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்குரியதாக போற்றப்படுவது காஞ்சிபுரத்தில் உள்ள ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாத சுவாமி திருக்கோயில்.இக்கோயில் உண்டியல்கள் கடந்த 9.1.24 ஆம் தேதிக்குப் பிறகு திறந்து எண்ணப்பட்டது. 

பொது உண்டியல்கள் 12 எண்ணப்பட்டதில் ரொக்கம் ரூ.18,60,612,கோயில் திருப்பணி உண்டியலில் 1,01,405,கோயிலில் உள்ள கோசாலை உண்டியலில் 63,598 ஆகியன உட்பட மொத்தம் ரூ.20,25,615 இருந்தன.இவை தவிர தங்கம் 31 கிராமும், வெள்ளி 225 கிராமும் இருந்தது.

கோயில் செயல் அலுவலர் ப.முத்துலட்சுமி,ஆய்வாளர் பிரித்திகா,வரதராஜசுவாமி கோயில் செயல் அலுவலர் ச.சீனிவான்,சித்ரகுப்தசுவாமி கோயில் செயல் அலுவலர் அமுதா ஆகியோர் உட்பட அறநிலையத்துறை அதிகாரிகள் பலரது நேரடி மேற்பாவையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்கள், தன்னார்வலர்களால் காணிக்கைகள் எண்ணப்பட்டது.

 

No comments

Thank you for your comments