Breaking News

போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி- காஞ்சிபுரத்தில் தோட்டக்கலை உதவி அலுவலர் பணியிடை நீக்கம்

காஞ்சிபுரம், மார்ச் 20:

போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்தது தொடர்பாக காஞ்சிபுரம் அருகே படப்பையில் தோட்டக்கலை உதவி அலுவலர் க.மணியை தோட்டக்கலை இயக்குநர் குமரவேல்பாண்டியன் செவ்வாய்க்கிழமை இரவு பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.


காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் தோட்டக்கலை உதவி அலுவலராக பணியாற்றி வந்தவர் க.மணி(57) தோட்டக்கலை உதவி அலுவலர் சங்க மாநிலத் தலைவராகவும் கடந்த 11 ஆண்டுகளாக இருந்து வருகிறார். 

இவர் போலியாக விவசாயிகளுக்கான மானிய விண்ணப்பங்கள் தயாரித்தது, விண்ணப்பங்களில் போலியாக விவசாயிகளின் கையொப்பம் இட்டது, விவசாயிகளுக்கு முறையாக இடுபொருட்கள் வழங்காதது, தாழ்த்தப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய அரசு மானியத்தை முறையாமல் வழங்காமல் இருந்து வந்தது, அரசின் வருவாய்த்துறை ஆவணங்களில் திருத்தம் செய்தது உள்ளிட்ட செயல்களை செய்து வருவதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கே.நேரு மற்றும் அவரால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பலரும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகனிடம் புகார் செய்திருந்தனர்.

இப்புகாரை மாவட்ட ஆட்சியர் தோட்டக்கலை இயக்குநர் குமரவேல் பாண்டியனுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தார். ஆட்சியரின் பரிந்துரையின்படி விசாரணை நடத்திய இயக்குநர் உதவி அலுவலர் க.மணியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

No comments

Thank you for your comments