காஞ்சிபுரத்தில் சிறப்பாக பணியாற்றிய மகளிர்களுக்கு விருதுகள் - கலெக்டர் கலைச்செல்வி வழங்கினார்
காஞ்சிபுரம், மார்ச் 11:
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் அவரது அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், மாவட்ட சமூக நல அலுவலர் பா.கல்யாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் உலக மகளிர் தினத்தையொட்டி பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10-க் கும் மேற்பட்ட மகளிர்க்கு மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் சால்வைகளை அணிவித்து விருதுகளையும் வழங்கி கௌரவித்தார்.பின்னர் 5 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு காதொலிக் கருவிகளையும் ஆட்சியர் வழங்கினார்.
குறை தீர்க்கும் கூட்டத்தில் 541 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்று அவை துறை சார்ந்த அலுவலர்களுக்கு அனுப்பி உடனடியாக தீர்வு காணுமாறும் மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்தார்.

No comments
Thank you for your comments