Breaking News

செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள், கண்காட்சி, நலதிட்ட உதவிகள்

காஞ்சிபுரம்:  

காஞ்சிபுரத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனைகள் குறித்த சிறப்பு புகைப்படக் கண்காட்சியை செவ்வாய்க்கிழமை குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்து பார்வையிட்டார்.


காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழக அரசின் சாதனைகள்,நலத்திட்ட உதவிகள் குறித்த சிறப்பு புகைப்படக் கண்காட்சி செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் நடைபெற்றது.தொடக்க விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்தார்.எம்பி க.செல்வம்,மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் ராமச்சந்திர பிரபு வரவேற்று பேசினார்.குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் அமைச்சர் தா.மோ.அன்பரசன் சிறப்பு புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார்.

கண்காட்சியில் சாதனை படைத்த தமிழக விஞ்ஞானிகளுக்கு முதல்வரால் நடத்தப்பட்ட பாராட்டு விழா, நிதிவசதி குறைவாகவுள்ள 2000 ஆலயங்களுக்கு ஒருகால பூஜை நடத்திட முதல்வரால் ரூ.40 கோடி நிதி வழங்கிய விழா, தமிழக முதல்வரை சந்திக்க வந்தவர்கள் வழங்கிய புத்தகங்களில் 1500 ஐ சிறை நூலகங்களுக்கு வழங்கும் விழா, மதுரையில் 62.78 கோடி மதிப்பில் ஏறு தழுவுதல் அரங்கத்தை முதலமைச்சர் திறந்து வைத்த விழா உள்ளிட்ட அரசு விழாக்கள்,அரசு நலத்திட்டங்களை தொடக்கி வைத்த விழாக்கள் ஆகியன இடம் பெற்றிருந்தன.

கண்காட்சி தொடக்க விழாவையொட்டி 19 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.18.24லட்சம் மதிப்பில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், 4 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4.24லட்சம் மதிப்பிலான பேட்டரி வீல் சேர்கள்,மாவட்ட தொழில் மையம் மூலம் மானியத்துடன் கூடிய 4 ஆட்டோக்களையும் அமைச்சர் வழங்கினார். 

செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது. உதவி மக்கள் தொடர்பு அலுவலர் சதீஷ்குமார் நன்றி கூறினார்.

 

No comments

Thank you for your comments